தி ராஜா சாப் தெலுங்கு படத்தின் முதல் பார்வை வெளியீடு

தெலுங்கு நடிகர் பிரபாஸ்- இயக்குநர் மாருதியுடன் இணையும் புதிய படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ‘தி ராஜா சாப்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வைஅதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் கட்டவுட்  பிரபாஸின் சொந்த ஊரான பீமாவரத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. விவேக் குச்சிபோட்லா இணை தயாரிப்பாளராக பணியாற்றும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார். பிரபாஸை மாஸான தோற்றத்தில் காட்சிப்படுத்தி இருக்கும் இந்த பான் இந்திய திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
 மேலும் ‘தி ராஜா சாப்’ படத்தின் முதல் பார்வை வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் பிரபாஸ் லுங்கியை அணிந்து விண்டேஜ் தோற்றத்தில் அசத்தியிருக்கிறார். ஜாலியான மற்றும் ரொமாண்டிக்கான கேரக்டர் லுக்கில் பிரபாஸை பார்த்ததும்.., ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் புது விதமான உணர்வை அளித்திருக்கிறது.
இப்படத்தின்  இயக்குநர் மாருதி. இவரது இயக்கத்தில்  ‘பலே பலே மகடிவோய்’, ‘பிரதி ரோஜுபந்தகே’ போன்ற வெற்றி பெற்ற குடும்பம் பொழுது போக்கு படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் தெலுங்கு திரையுலகில் வெளியான முதல் காதலும் திகிலும் கலந்த திரைப்படமான ‘பிரேம கதா சித்திரம்’ எனும் வெற்றி படத்தையும், காதலும், நகைச்சுவையும் கலந்த ‘மகானுபாவுடு’ போன்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தையும் இயக்கியவர். இவரது இயக்கத்தில் தயாராகும் காதலும், திகிலும் நிறைந்த இந்த படத்தை
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வரா கவனிக்க, வி எஃப் எக்ஸ் பணிகளை ‘மகதீரா’, ‘பாகுபலி’ போன்ற படங்களில் பணியாற்றிய கமல் கண்ணன் தலைமையிலான குழுவினர் மேற்கொள்கிறார்கள்.