திலீப் நடிக்கும் மலையாளப்படத்தில் தமன்னா அறிமுகம்

நடிகை தமன்னா 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி என்று 4 மொழிகளிலும்  50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ஆனால் மலையாளப் படங்களில் மட்டும் அவர் நடிக்கவில்லை. மலையாள நடிகர் திலீப் பாலியல் குற்றசாட்டு வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படாத சூழ்நிலையில் பிரபலமான மலையாள நடிகைகள் அவருடன் இணைந்து நடிக்கவிருப்பம் காட்டவில்லை அதனால் சமீப காலங்களாக எந்த மொழியிலும்  தமன்னாவுக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை இந்த நிலையில் திலீப் நாயகனாக நடிக்கும் மலையாளப்படத்தில் நடிக்கின்றார் அவர் நடிக்கும் முதல் மலையாளப் படம்  கேரளாவில் நேற்று தொடங்கியது. தமன்னாவின் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் திலீப் நடிக்கிறார். ‘ராம் லீலா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய அருண் கோபி இந்தப் படத்தை இயக்குகிறார்.

புலி முருகன், சிஐடி மூஸாபோன்ற படங்களுக்குக் கதை எழுதிய உதய்கிருஷ்ணா இந்தப் படத்திற்குக் கதை எழுதியிருக்கிறார். ‘ராம் லீலா’ படத்தின் ஒளிப்பதிவாளரான ஷாஜி குமார் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

சி.எஸ்.சாம் இசையமைக்கிறார். இந்தப் படத்தை வினாயகா அஜீத் தயாரிக்கிறார்.இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று காலை கொச்சியில் கொட்டாரக்கார கணபதி கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திலீப், தமன்னா, இயக்குநர் அருண் கோபி, நடிகர் சித்திக் மற்றும் படக் குழுவினருடன் திலீப்பின் ரசிகர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்குகிறது.