தெலுங்கில் வெளியாகும் மயோன்

தமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் படத்தை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கே.எஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் மயோன் படத்தை என் கிஷோர் இயக்கியுள்ளார் பாடல்கள் எழுதி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படம் சூன் 24 அன்று தமிழகத்தில் வெளியானது
அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை மையக் கருவாகக் கொண்ட மயோன் படம்
  குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது. மேலும் பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.
தமிழகத்தில் கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக இந்த படத்தை வரும் ஜூலை 7ஆம் தேதி ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் 350 திரைகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.