சீதா ராமம்’ படத்தின் ரிலீஸ் அன்று கண்ணீர்விட்டு அழுதேன் என்று நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்துள்ளசீதா ராமம் படத்தைஹனு ராகவபுடி இயக்கியுள்ளார் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம்
இந்த ‘சீதா ராமம்’ கதையோடு இயக்குநர் ஹனு ராகவபுடியும் தயாரிப்பாளரும் என்னை அணுகியபோது, இந்தப் படம் தரமாக இருக்கும் என்று நம்பினேன். அது உறுதியாகி இருக்கிறது. திரைப்படம் என்பது பல கலைஞர்கள் மற்றும் திறமைகளின் கூட்டு முயற்சி. அனைவரின் பங்களிப்பாலும் இந்தப் படம் அழகானதாக மாறியது.படத்தின் ரிலீஸ் அன்று நான் அழுதேன். படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை நினைத்து வியந்தேன்என் மீதுநீங்கள் காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.