இந்திய அரசு 68வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வு குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், மற்றும் கலைஞர்கள் பட்டியலை சூலை 24 அன்று அறிவித்தது தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகளும், மலையாள சினிமாவுக்கு 11 விருதுகளும் கிடைத்திருக்கிறது இந்த நிலையில் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படும் மலையாள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தேசிய திரைப்பட விருது என்பது கொடூரமான நகைச்சுவையாகிவிட்டது என விமர்சனம் செய்திருக்கின்றார்
விருது படங்களுக்கு என்ன அளவுகோல் என்பதும் தெரியவில்லை. அவர்களின் பட்டியலில் சிறந்த படங்கள் இல்லை. பிளாக் பஸ்டர் படங்களுக்குத்தான் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதெல்லாம் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கக் கூடாது. அதற்கு என்ன காரணம் என்று அனைவருக்கும் தெரியும். இது பெரிய அநியாயம் என்றுதான் என்னால் சொல்ல முடியும். கேரளாவை அனைத்துத் துறைகளில் இருந்தும் ஒதுக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சினிமா என்பதை ஒரு பொழுதுபோக்காக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் சினிமா ஒரு கலை வடிவம்.