நடிகைஓவியாவின் கம்யூனிஸ்ட் அரசியல் ஆசை

சற்குணம் இயக்கத்தில்களவாணி படத்தின் மூலம் கன்னியம்மிக்ககதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா காலப்போக்கில் உரிய வாய்ப்புக்கள் அமையாததால் கிளாமர் நடிகையாக மாறிப்போனார் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லாத நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமானார்ஓவியாவின் அப்போதைய நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பல விஷயங்களை ஓவியா பேசியுள்ளார். அதில் பேசிய அவர்,  சமூகம் சார்ந்த எனது கருத்துக்கள் நடிகை என்ற அடையாளத்திலிருந்து சொல்கிறேன் என்பதை விட, நாட்டின் சக மனிதரக வெளிப்படுத்துகிறேன் என்பதே சரி. எனது கருத்துகளால் பலருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். அதனால் எனது கருத்துக்கு வரும் எதிர்வினைகளை நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மேலும் நானும் என்னைப் போன்ற பலருக்கும் இங்கு நடக்கும் அரசியல் நிகழ்வுகள் மிக தாமதமாக புரியவருகிறது. அதற்காக நம்மால் எதாவது செய்ய முடியுமா என யோசிக்கையில் முதலில் குரல் கொடுக்க வேண்டும் என தோன்றுகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் பாதுகாப்பில்லை, கலாச்சாரம் என்ற பெயரில் மற்றவர்களின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது.
சிறு குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், இது போன்ற பாதுகாப்பில்லாத சமூகத்தில் வாழ பயமாக இருக்கிறது.  கலாச்சாரம் எனபது நாம் மனிதனாக மனிதத்தோடு வாழ்வதும் மற்றவர்களை மனிதத்தோடு அனுகுவதும் தான். நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம் என்றால், எனது கருத்துகளுக்கு வரும் மிரட்டல்கள் இது பாதுகாப்பற்ற இந்தியா என உணர வைக்கிறது. ஊடக வெளிச்சத்தில் உள்ள எனக்கே இவ்வளவு மிரட்டல்கள் என்றால், இன்னும் தனது வாழ்க்கையில் எதுவும் தொடங்கிடாத சாதாரணப் பெண்ணிற்கு எவ்வளவு மிரட்டல்கள் இருக்கும் யோசிக்கையில் இன்னும் பேச வேண்டும் எனத் தோன்றுகிறது.
நான் எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை. ஆனால் எல்லோரையும் சமமாகப் பார்க்கிற கம்யூனிச சித்தாந்தம் எனக்கு பிடித்திருக்கிறது. நான் ஒரு கம்யூனிஸ்ட் என என்னைச் சொல்லிக்கொள்ளவதில் எனக்கு விருப்பம் தான். இங்கு உருவாக்கப்பட்டிருக்கும் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. மனிதர்களுக்காகத்தான் எல்லாமுமே. அப்படியிருக்கையில் மனிதர்களை விட்டுவிட்டு வெறும் கலாச்சாரத்தினை மட்டும் வைத்து எந்த பயனும் இல்லை. மேலும் இயற்கையின் படைப்பில் அனைவரும் சமமாக இருக்க, நாம் சிறு வயதிலிருந்தே பல்வேறு பாகுபாடுகளை எதிர்கொண்டும் அனுமதித்தும் வருகிறோம். பள்ளியில் இருக்கும் மதிபெண்கள் முறை நம்மை பாகுபடுத்தவில்லையா என்ற கேள்வி சிறுவயதிலிருந்தே என்னுள் இருக்கிறது.    நான் கேரளாவில் பிறந்திருந்தாலும், அரசியலில் ஈடுபடும் ஒரு காலகட்டம் வரும்போது நிச்சயம் அது தமிழ்நாட்டில் தான் தொடங்கும். இவ்வாறு நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.