நடிப்பில் ஆர்வமில்லை ராஜ்கமல் என்பதால் நடித்தேன் – லோகேஷ் கனகராஜ்

மார்ச் 14 அன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது 38 பிறந்த நாளை தன் நண்பர்களுடன் கொண்டாடினார். இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் அவரது நண்பர்களான அர்ஜுன் தாஸ், வசனகர்த்தா ரத்னகுமார், சிவகார்த்திகேயன், நடிகை ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பங்கேற்றனர். லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் பரிசாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இன்டிபெண்டண்ட் ஆல்பம் பாடலுக்கான முதல் பார்வையை வெளியிட்டது. அந்த சுயாதீன ஆல்பத்திற்குஸ்ருதிஹாசன் இசையமைத்து, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
 ‘இனிமேல்’. எனப் பெயரிடப்பட்டுள்ள ஆல்பத்திற் காண பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.
இந்த ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ்,
“எனக்கு பொதுவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. என்னிடம் அவர்கள் கதை சொன்ன விதம், கமல்ஹாசனின் பாடல் இதெல்லாம் சேர்ந்து சரி நடிக்கலாம் என தோன்றியது. இதை நான் பெரிய நடிப்பாகவே கருதவில்லை.ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து எது வந்தாலும் நான் மறுக்கமாட்டேன். அதுதான் முக்கியமான காரணம். அந்த ஆல்பம் பாடலுக்குப் பிறகு கேமராவுக்கு முன்னாள் நிற்கும் பயம் குறைந்துவிட்டது. அதற்கு காரணம் ஸ்ருதிஹாசன். படங்களை இயக்குவதே பிடித்திருக்கிறது.நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை. 3 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளேன். அதனை முதலில் எடுத்து முடிக்க வேண்டும்” என்றவர்
‘ரஜினி 171’ படம் குறித்து கூறுகிறபோது , “ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும். இப்படம் முடித்து ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளேன்” என்றார். இனிமேல் ஆல்பத்தின் முதல் பார்வை, டிரைலர் வெளியான பின்பு ஆக்க்ஷன் படங்களை இயக்கி வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ் ஸ்ருதி ஹாசனுடன் ரொமாண்டிக்காட்சிகளில் பின்னி பெடலெடுக்கிறார் என்று தமிழ் சினிமா இயக்குநர்களும், அவரது நண்பர்களும் சமூக வலைதளங்களில் புகழ்ந்த இனிமேல் ஆல்பம் எப்படி இருக்கிறது?
“வழக்கமான காதல், அவர்களிடையே இணக்கமான ரொமான்ஸ், அதன்பின் வரும் ஊடல் அதனால் ஏற்படும்பிரிவு, மீண்டும் கூடல்என்ற ஃபார்முலாவில் இப்பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடல் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் லோகஷ் கனகராஜ். ஆனால், அவருக்கும் ரொமான்ஸுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது என்பதை
 ஸ்ருதிஹாசனுடனான அவரது காட்சிகளில் மென்மையைத் தாண்டிய ஒரு முரட்டுதனம் தெரிகிறது.  மேலும், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் பலவீனமானவராக இருப்பது முகத்தில் பளிச்சிடுகிறது. ஆங்கிலம் கலந்த பாடல் வரிகள் தமிழ் சினிமா ரசிகனை கவரும் வகையில் இல்லை.