தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கினார். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் வசூலில்சாதனை படைத்தது.
பிரதீப் ரங்கநாதன், தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு ‘டிராகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.டிராகன் படத்தில் யூடியூபர்களான வி.ஜே. சித்து அன்பு என்ற கதாபாத்திரத்திலும், ஹர்ஷத் கான் வெற்றி என்ற கதாபாத்திரத்திலும் நடிகை கயடு லோஹர், பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்து இருந்தது
இந்நிலையில் படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின் மயில்வாகனன் என்ற கதாபாத்திரத்திலும், கவுதம் வாசுதேவ் மேனன் வேல் குமார் என்ற கதாபாத்திரத்திலும், கே. எஸ். ரவிகுமார் பரசுராம் என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு எக்ஸ் தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.