நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடந்து முடிந்த 24 ஹெச் கார் ரேஸில், 991 பிரிவில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி 3-வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அவருக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது.