இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட படங்களில் ஆர்ஆர்ஆர் படம் தேர்வு செய்யப்படவில்லை அந்தப் படத்தின் இயக்குநர் ராஜமவுலியின் சுயமுயற்சியில் வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் ஆர்ஆர்ஆர் படம் இடம்பெற்றுள்ளது அதற்கு முன்னதாக நாட்டு நாட்டு பாடலுக்காக குட்டி ஆஸ்கர் விருது என திரைதுறையினரால் போற்றப்படும் கோல்டன் குளோப் விருதை அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு வழங்கப்பட்டுள்ளது இது இந்திய சினிமாவுக்கு சர்வதேச அரங்கில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக கருதப்படுகிறது இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் திரைக்கலைஞர்கள் அனைவரும் ராஜமவுலிக்கும், கீரவாணிக்கும் வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தாங்கள் நடித்த படங்களின் விளம்பர நிகழ்ச்சி, பத்திரிகையாளர் சந்திப்புக்களுக்கு கூட வர மறுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்கள் இருக்கும் தென்னிந்திய சினிமாவில் 1000ம் கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின் கதை நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இருவரும் RRR படத்தின் விளம்பர நிகழ்ச்சி முதல் படம் வெளியாகி வெற்றி பெற்று ஓடி முடிந்த பின்னரும் அந்தப் படம் விருதுக்கான போட்டியில் பங்கேற்க எடுக்கப்பட்டுவரும் அனைத்து முயற்சிகளிலும் ராஜமவுலியுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் அத்துடன் அது சம்பந்தமாக வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்வுகளிலும் பங்கெடுத்துவருகின்றனர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இருவரின் அர்பணிப்புடன் கூடிய பங்கேற்பு இந்திய சினிமாவில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது என்றால் தெலுங்கு திரையுலகம்அதனை பெருமைக்குரியதாக கொண்டாடி வருவதுடன் ஊடகங்களிடம் அதனை கூறி பேசி வருகின்றனர்
ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்தது குறித்து அதன் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் ஊடகங்களுக்கு
அளித்த பேட்டி ஒன்றில்,
“நாட்டு நாட்டு பாடலுக்கான உருவாக்கத்தின்போது நான் வெறுமையாக இருந்தேன். இது நடக்காது என உணர்ந்த நான் வாஷ்ரூமில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அழுதுகொண்டிருந்தேன். ஆனால், இயக்குநர் ராஜமவுலியின் கடினமான உழைப்பால் தான் இது சாத்தியமானது. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.இரண்டு ஹீரோக்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரால் இது நடந்தது. ஏனென்றால் அவர்கள் இருவரும் சிறந்த நடனக் கலைஞர்கள். மேலும் இசையமைப்பாளர் கீரவாணியின் இசை முழு சுமையையும் குறைத்துவிட்டது.
ராஜமவுலி என்னிடம் பாடலுக்கான கான்செப்ட், அது எப்படி அரங்கேறப் போகிறது என அனைத்தையும் சொல்லிவிட்டார். ‘நாட்டு நாட்டு’ பாடலின் ஸ்டெப்புக்காக எனக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டன. பின்னர், பாடலை ஒத்திகை பார்க்கவும் படமாக்கவும் சுமார் 20 நாட்கள் ஆனது. ஜூனியர் என்டிஆரும் சரி, ராம் சரணும் சரி மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். நான் என்ன சொன்னாலும் அதை அப்படியே உள்வாங்கி கொண்டு வெளிப்படுத்தினர். காலை 6 மணிக்கு எழுந்து இரவு 10 மணிக்குத்தான் தூங்க செல்வோம். அனைவரும் பாடலுக்காக கடினமாக உழைத்தோம்” என்றவர் மேலும் கூறுகையில்
இருவரின் ஸ்டைலுக்கும் ஒத்துப்போகும் வகையில் கிட்டத்தட்ட 118 வெவ்வேறு ஸ்டெப்புகளை முயற்சித்துப்பார்த்தாக கூறும் அவர், “ஒருவர் சிங்கம். மற்றொருவர் சிறுத்தையைப்போல. இருவரும் சிறந்த நடனக் கலைஞர்கள். ஆனால், அவர்களின் வெவ்வேறான ஸ்டைல் தான் இங்கே பிரச்சினையாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் ஒத்துப்போகும் பொதுவான ஸ்டைல் ஒன்றை கண்டறிய வேண்டும். அதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.
நாங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து அனைத்தையும் உருவாக்கினோம். பொதுவாக ஒரு பாடலுக்கு 2 முதல் 3 ஸ்டெப்புகளை தான் முயற்சிப்பேன். ஆனால், இந்தப் பாடலுக்காக 118 நடன அசைவுகளை உருவாக்கினேன். தற்போது கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ள நிலையில், ஓர் இந்தியனாக, நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.