பங்கு வர்த்தகத்தில் முதலீடு திரட்ட முயற்சிக்கும் வேல்ஸ் ஃபிலிம்ஸ்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் முதல் முறையாக ஐ.பி.ஓ. மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது.

இந்திய சினிமாவில் திரைப்படங்கள் தயாரிக்க பங்கு வர்த்தகம் மூலம் முதலீட்டை திரட்ட பங்குகளை வெளியிட்டவர் சுஜாதா பிலிம்ஸ் பி.லிட் உரிமையாளர்களில் ஒருவரானG.வெங்கடேஷ்வரன் அடிப்படையில் பட்டய கணக்காளரான G. வெங்கடேஷ்வரன் திரைப்பட தயாரிப்பாளராக மட்டும் அல்லாது தமிழ்நாடு முழுவதும் 1980 – 1990களில் திரைப்படவிநியோக தொழிலில் ஆதிக்கம் செலுத்தியவர். இவரது நிறுவனத்திற்கு ஒன்பது விநியோக தலைநகரங்களிலும் அலுவலகம் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இவரது நிறுவனம் செலுத்த வேண்டிய கோடி ரூபாயை ஒரே காசோலை மூலம் வருமானவரித்துறைக்கு செலுத்தியதன் மூலம் இந்தியா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் வெங்கடேஷ்வரன்.அதன் காரணமாக பங்கு வர்த்தகத்தில் இந்நிறுவனம் முதலீட்டுக்காக பங்குகளை வெளியிட்டபோது சினிமா துறையினர் அதிகளவு பங்குகளை வாங்கினார்கள். சுஜாதா நிறுவனம் தாங்கள் கூறியபடி பங்குதாரர்களுக்கு நாணயமாக நடந்துகொள்ளவில்லை என்பதுடன் பங்குகளுக்கான பணத்தை திருப்பித் தரவில்லை அதனால் G.வெங்கடேஷ்வரன் முயற்சி தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது.
அவரைப் போன்றே சுவாமிநாதன் சாய்மீரா ஆக்சஸ் பி.லிட் எனும் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் திரைப்பட தயாரிப்பாளர் பிரமிட் நடராஜனை இணைத்துக்கொண்டு பிரமிட் சாய்மீரா நிறுவனத்தை தொடங்கினார்.
தமிழ்நாட்டில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளை குத்தகைக்கு எடுத்த இந்த நிறுவனம் சர்வதேச அளவில் திரையரங்கு தொழில், திரைப்பட விநியோகம், தயாரிப்பு என விரிவுபடுத்த முயற்சித்தது அதற்கான கட்டமைப்புக்களையும், திட்டங்களையும் உருவாக்க முடிந்தசாமிநாதனால் நேர்மையான நிர்வாகிகளை நிறுவன பொறுப்புகளில் நியமிக்க முடியவில்லை. திரைப்பட தயாரிப்பாளர்களாக, விநியோகஸ்தர்களாக இருந்து வெற்றி பெறமுடியாமல்போனவர்கள்  பிரமிட் சாய்மீராவின் உயர் பொறுப்புகளில்அமர்த்தப்பட அவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ள நிறுவனத்தைபயன்படுத்தியதால் நிறுவனம் வளரவில்லைஇந்த நிறுவனமும் தங்களது நிதி தேவைக்காக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டது நிறுவனத்தின் தவறான தகவல், நாணயமற்ற நடவடிக்கைகளால் பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்கு பங்குவர்த்தகத்தில் ஈடுபடதடைவிதிக்கப்பட்டது கடந்த காலங்களில் பங்கு வர்த்தகத்தில் முதலீட்டை திரட்ட முயற்சித்தவர்களின் கசப்பான வரலாறு இந்த நிலையில்
திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் “வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்” நிறுவனம் ‘இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்’ (ஐபிஓ) மூலம் பொதுமக்களுக்கு பங்குகளை வழங்க முடிவெடுத்து அறிவித்திருக்கிறது
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் :வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் என்பது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும், 
இது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினராகவும் உள்ளது. இது திரைப்பட தயாரிப்பு, திரைப்பட விநியோகம் மற்றும் திரைப்பட உரிமை விற்பனை போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பிற பிராந்திய மொழிகளிலும் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஐசரி கே.கணேஷ், தமிழ் நகைச்சுவை நடிகர் மறைந்த ஐசரி வேலனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவனம் முதல் முறையாக பொதுமக்களிடமிருந்து ஐபிஓ மூலம் ரூ.34 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது 
இது திரைப்பட தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும். மேலும் இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தையில் SME தளத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.ஒரு பங்கின் விலை ரூ. 99/- பங்குகளின் வெளியீட்டு அளவு. ரூபாய் 34,08,000IPO மார்ச் 10, 2023 அன்று தொடங்கி மார்ச் 14, 2023 அன்று நிறைவடைகிறது.உள்ளடக்கக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சில்லறை முதலீட்டாளர்கள், சில்லறை அல்லாத முதலீட்டாளர்கள் போன்ற பல்வேறு வகை முதலீட்டாளர்களுக்கு IPO வழங்கப்படுகிறது.இது எங்கள் வலைத்தளமான www.velsfilminternational.com-ல் மக்கள் பார்வைக்கு உள்ளது.எங்கள் நிறுவனத்தின் முன்னணி மேலாளர் (Lead Manager) M/s கம்பட்டா செக்யூரிட்டீஸ் லிமிடெட், மும்பை.IPO தொடர்பான பிற தகவல்களுக்கு, எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும்.மேலும், எங்களின் துணை நிறுவனமான Vels Studios and Entertainment Private Limited பெங்களூருவில் JOLLYWOOD என்ற பெயரில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்கி வருகிறது.இதில் திரைப்பட ஸ்டுடியோ, கேளிக்கை பூங்கா, செயற்கை நீரூற்று பூங்கா, சாகச விளையாட்டுகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. 
இதன் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் இது 2023-ம் ஆண்டின் மத்தியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
இது சம்பந்தமாக திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் விசாரித்தபோது தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் இத்தகைய தொரு முயற்சியை மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது
தமிழ்நாட்டில் போதுமான படப்பிடிப்பு தளங்கள் இல்லை. ஆந்திராவை போன்று சென்னையில் திரைப்பட நகரத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
திரைப்பட தொழிலுக்காக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் அவரது நிறுவனம் வேலைவாய்ப்புகள் உள்ள திரைப்பட ஸ்டுடியோவை கர்நாடக மாநிலத்தில் அமைப்பது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.