“பணம், பதவி, பவர்… ஜெயில்!” – அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படம் வருமா?

.
இயக்குநர் அமீர் அரசியல்வாதியாக நடித்திருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’படத்தின் முதல் பார்வை வெளியானது முதல் விவாதத்துக்குரிய திரைப்படமாகவே இருந்து வருகிறது.மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள  இப்படத்தில் சாந்தினி, ஶ்ரீதரன், ராஜ்கபூர்,ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, சரவண சக்திமாரிமுத்து,  சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், ஆகியோர் நடித்துள்ளனர். வித்யாசாகர்இசையமைத்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசர் எப்படி?
கொலை வழக்கில் அமீர் சிறை செல்ல வேண்டிய காட்சியுடன் டீசர் தொடங்குகிறது.  “பணம், பதவி, பவர் இந்த 3 எழுத்தையும் அனுபவிச்சது மாதிரி, ஜெயிலுங்குற 3 எழுத்தையும் அனுபவிச்சா தானே முழு அரசியல்வாதி” என அவரது குரல் ஒலிக்க ‘மக்கள் போராளி’ அமீர் என்ற டைட்டில் கார்டு திரையில் விரிகிறது‘உங்க அரசியல் வாழ்க்க முடிஞ்சதா?’ என பத்திரிகையாளர்கள் கேட்க, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்” என்று அமீர் கூறியதும் டீசர் முடிகிறது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கபட்டிருந்தது. வணிக ரீதியாக படத்தை வெளியிடுவதில் தடுமாற்றங்கள் இருந்து வந்த நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி உலகம் முழுவதும் படத்தை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது டீஸர் வெளியாகியுள்ளது.