இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றினால் ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு “நான் என்ன அந்த அரசியலிலே போகவில்லை.அப்படி போகும்போது சொல்கிறேன்” என கூறியுள்ளார் நடிகர் வடிவேலு இந்தியா முழுவதும் பாரத் என்கிற பெயர் பற்றிய விவாதம் தீவிரமடைந்து வருகிறது. திரைப் பிரபலங்கள் இது சம்பந்தமாக என்ன கருத்து சொல்லப்போகிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும், பொது சமூகமும் உற்று நோக்கி வருகின்றனர். பாரத் என்பதை பாஜக ஆதரவாளரும், இந்தி நடிகையுமான கங்கணா ரணாவத் ஆதரித்து கருத்து வெளியிட்டு இருந்தார். இந்தநிலையில்
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்ற நடிகர் வடிவேலு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது “சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி நடித்திருந்தார். இப்போது இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். ரொம்பவும் சுவாரஸ்யமாக வந்திருக்கிறது. முதல் பாகம் போன்று சந்திரமுகி – 2 ல் முருகேசன் என்னும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். இதுவரை காமெடி படங்களில் நடித்துள்ளேன். மாமன்னன் மூலம் குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன். என்றவரிடம்இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றினால் ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு “நான் என்ன அந்த அரசியலிலே போகவில்லை.அப்படி போகும்போது சொல்கிறேன்” என்றார்.