பிகில் படம் வேண்டாம் என்ற ரம்பா தியேட்டர்

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தீபாவளிக்கு பிகில் படத்தை திரையிட்டு முதல் வாரத்தில் மொத்த முதலீட்டையும் வசூல் மூலம் எடுக்க

படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கூடுதல்திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்

திகில் படத்துடன் தீபாவளி பந்தயத்தில் கைதி திரைப்படம் ரிலீசாகிறது இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில்ஏதாவது ஒரு புதிய படத்தை திரையிட்டுக் கொள்ளலாம் என்கிற மனநிலை உள்ளது.

வசூல் முக்கியத்துவமுள்ள திரையரங்குகளை பிகில் படத்திற்கு ஒப்பந்தம் செய்தால் தான் குறுகிய நாட்களுக்குள் அதிகமான வசூல் கிடைக்கும் அந்த அடிப்படையில் திருச்சி நகரின் மையப்பகுதியில் உள்ள ரம்பா தியேட்டரில் பிகில் படத்தை திரையிடுவதற்கு கேட்டபொழுது வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர் மறுத்து கார்த்தி நடித்துள்ள கைதிி படத்தை திரையிட ஒப்பந்தம் செய்து உள்ளார்.

என்ன காரணம் என்று விசாரித்தபோது திருச்சி நகரில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் பிகில்படம் திரையிடப்படுகிறது

மேலும் அஜித், விஜய் படங்களை திரையிட்டால்அவர்களுடையரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் அடாவடி தனத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதுடன், தியேட்டரில் உள்ள இருக்கைகள் சேதமடைகிறது இவற்றை மறு நிர்மாணம் செய்ய நிர்வாகம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதனால்  ஆர்ப்பாட்டம் அடாவடித்தனம் செய்யும் ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர்கள் நடித்தபடங்களை திரையிட்டு சிரமங்களை சந்திப்பதை காட்டிலும் படத்தை திரையிடாமல் தவிர்ப்பது நல்லது என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.