தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் கிளப் என்பது நடிகர்களுக்கு கௌரவமான ஒன்றாக கருதப்படுகிறது அசுரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையம் அளவுக்கு வியாபாரமும் வசூலும் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது
இது உண்மையா பொய்யா மிகைப்படுத்தப்பட்டதா என்கிற விவாதம் சினிமா துறையினர் மத்தியில் எழுந்துள்ளது இந்த சூழலில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் வியாபார விவரங்கள் வெளியாகியிருக்கிறது
முதல்முறையாக விஜய் நடித்துள்ள படம் 200 கோடி ரூபாய் வியாபாரத்தை கடந்துள்ளது இதுவரை இந்திய சினிமாவில் இந்திப் படங்கள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது
மாநில மொழி திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வியாபாரத்தை கடப்பது சாதனை நிகழ்வாக இருந்து வந்தது அதனை முறியடித்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் செய்யப்பட்ட படம் ரஜினிகாந்த் நடித்து வெளியான எந்திரன்
அதற்குப்பின்னால் ரஜினி நடித்த கபாலி, எந்திரன் -2 , காலா, பேட்டை என அனைத்து படங்களும் 100 கோடி ரூபாய் வியாபாரத்தை எளிதாக கடந்து 200 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு மாநில மொழி படம் வியாபாரம் ஆகும் என்பதை இந்திய சினிமாவில் நிரூபித்தது
எந்திரன் படத்தை தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் வசூல் ரீதியாக சாதனை நிகழ்த்தியது தமிழகத்தில் எந்திரன் அளவுக்கு அதற்குப் பின்னால் ரஜினி நடிப்பில் வந்த எந்த திரைப்படமும் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை நிகழ்த்த வில்லை
ஆனால் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல் ,சர்க்கார் ஆகிய படங்கள் ரஜினி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தமிழகத்தில் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தில் இன்று வரை இருந்து வருகிறது
அதற்கு காரணம் விஜய் நடிக்கும் படங்கள் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படுகிறது பண்டிகை காலமென்பதால் மக்கள் மத்தியில் பணப்புழக்கமும் புதிய படங்கள் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் ஒரு காரணம்
சாதாரண நாட்களை விட தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகமான விலைக்கு டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர் மத்தியில் வேகமும் ஆர்வமும் இருப்பதும் ஒரு காரணம் இதுவே சாதாரண நாட்களில் விஜய் படம் ரிலீஸ் ஆனால் பாக்ஸ் ஆபீஸில் சாதனை நிகழ்த்த முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது
முதல்முறையாக விஜய் திரையுலகவரலாற்றில் அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தின் ஏரியா உரிமைகளும் வெளிநாட்டு வினியோக உரிமை, தொலைக்காட்சி டிஜிட்டல் உரிமைகள் வியாபாரம் ஆகியுள்ளது
பிகில் திரைப்படத்தை தயாரித்திருக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 185கோடி ரூபாய் செலவில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் திரைப்படம்
இதற்கு முன்னால் ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டது எந்திரன் 2 படத்திற்கு 500 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது
திகில் திரைப்படம் தமிழக உரிமை 73 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு உரிமை 28 கோடி ரூபாய், தொலைக்காட்சி டிஜிட்டல் உரிமை 52 கோடி ரூபாய், கேரளா கர்நாடகா உரிமை 14 கோடி ரூபாய், இந்தி டப்பிங் உரிமை 23 கோடி ரூபாய், தெலுங்கு உரிமை 8 கோடி ரூபாய் ஆடியோ உரிமை 3 கோடி ரூபாய் ஆக மொத்தம் 201 கோடிரூபாய்க்கு பிகில் திரைப்படம் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது