அம்மாவின் பேச்சைக் கேட்டு எந்த வம்புக்கும் செல்லாத தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோ ஹிப் ஆப் ஆதி. ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். அந்தப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் வானதியை (காஷ்மீரா) காதலிக்கிறார். ஆரம்பத்தில் ஒருதலையான காதல், நாயகனின் தொடர் முயற்சியால் காதல் கை கூடி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்துக்கான பணிகள் தொடங்க, இடையில் நிகழும் நிகழும் பிரச்சினையால் அமைதியான ஆதி வெகுண்டெழ வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டு, நீதிக்கான போராட்டத்தில் இறங்குகிறார். அது என்ன போராட்டம்? அதில் வெற்றி கிடைத்ததா என்பதுதான் படத்தின் ஒருவரி திரைக்கதை.
‘கிளப்புல மப்புல திரியிற பொம்பள’ என்ற ஆல்பம் பாடலில் கவனம் பெற்ற ஹிப் ஆப்ஆதி, அங்கிருந்து பல மைல்கள் நகர்ந்து பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களை பேசும் படத்தில் நடித்திருப்பது பாராட்டுதலுக்
பாதிக்கப்பட்ட நந்தினி கதாபாத்திரத்தின் மனநிலை என்ன என்பதை பதிவு செய்ய தவறி, குற்றவாளிகளுக்கு எதிராக திட்டம் தீட்டவும், அடியாட்களை அடித்து துவம்சம் செய்வதற்கு முக்கியத்தும் அளிப்பதால், சொல்ல வரும் விஷயம் மேலோட்டமாக கடக்கிறது. கோர்ட் ரூம் டிராமாவில் நீதிபதியைசுவாரஸ்யப்படுத்தியிரு
மொத்தமாக படம் வழக்கமான பெண்களை மீட்கும் ஆண் ‘ஹீரோயிச’த்துடனும், பிரச்சார தொனியை சுமந்துகொண்டும், வெகுஜன சினிமா ரசனையுடன் முடிந்த அளவுக்கு போராடிக்காமல் நகர்ந்து ‘பாஸ்’ மார்க்குடன் ஸ்கோர் செய்கிறது.