பிரசாந்த்துடன் மீண்டும் இணையும் இயக்குநர் ஹரி

அந்தகன் படத்தை தொடர்ந்து  பிரஷாந்த் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தப் படத்துக்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது.

அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குநர் ஹரி.

நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த நாளானஏப்ரல் 6 ஆம் தேதிபிரஷாந்த் 55 படத்தின் அறிவிப்பு  வெளியானது. ஸ்டார் மூவிஸின் சார்பாக இப்படத்தை நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கிறார்.

நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குநர் ஹரி இயக்கிய, அவரது அறிமுகப் படம் ‘தமிழ்’.அப்படம் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது, அனைவரும் அறிந்ததே. பட்டி தொட்டி எங்கும், திரை அரங்கில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, சாதனை படைத்தது.

அதன் பின் இயக்குநர் ஹரி, தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வந்ததோடு, தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே இயக்கி, தான் ஒரு வெற்றி இயக்குநர் என தனி முத்திரை பதித்தார்.

இப்போது இருவரும் மீண்டும் இணைகின்றனர்.
தமிழ்த் திரையுலகின் பல முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்தப்படத்தில்,பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கும் எனவும்,பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இணைய உள்ளார்கள் எனவும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்