பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா?

“நடிகர் சூர்யா நடிக்கும் 42வது படத்தைஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார் தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்

சூர்யாவுக்கு ஜோடியாக இந்திநடிகை திஷா பதானி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடர்ச்சியாகநடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. 
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்திற்காக இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி பயிற்சி எடுத்து வருகிறார் சூர்யாஎன கூறப்படுகிறது 
மேற்கண்ட இரண்டு படங்களை தவிர்த்துசுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேலுடன் ஒரு படமும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து, தயாரிப்பதாக இருந்த வணங்கான் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார் அதனால் ஏற்கனவே திட்டமிட்ட ஐந்து படங்களில் நான்கு படங்கள் மட்டுமே தயாரிப்பு பட்டியலில் உள்ளது 
சமீபத்தில் சூர்யா-ஜோதிகா இருவரும் மலையாள திரைப்பட நடிகரும் இயக்குநருமானபிருத்விராஜ் அவர்களை சந்தித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது அவரது இயக்கத்தில் சூர்யா நடிக்க போவதாக கூறப்பட்டது பின்னர் அது வதந்தி என்றும் செய்திகள் வெளியானது 
தமிழ் படங்களில் பிரதானமாக சூர்யா நடித்து வந்தாலும் தற்போது தனது சினிமா அல்லாத தொழில், சினிமா தயாரிப்புகள் அனைத்தையும் மும்பையை மையமாக கொண்டே செயல்பட்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன அதனால் குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டதாக இணையத்தில் செய்திகள் ரெக்கைகட்டி பறந்தாலும் சூர்யா தரப்பில் இருந்து எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை
இந்த நிலையில் இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று “பிரிட்டானியா பிஸ்கட்” இந்த நிறுவனத்தை தொடங்கியராஜன் பிள்ளை வாழ்க்கையை திரைக்கதையாக கொண்ட வாழ்க்கை வரலாற்று படத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாகவும் அதில் ராஜன் பிள்ளை கதாபாத்தித்திரத்தில் நடிகர் சூர்யா ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறதுஇது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது