பேட்டைக்காளி’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா

வெற்றிமாறன் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்டுள்ள’பேட்டைக்காளி இணைய தொடரின்’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்ஜானகி கல்லூரியில் நடைபெற்றதுஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் இணையத்தொடர் ’பேட்டைக்காளி’.  காளைகளை அடக்குபவர்களுக்கும் வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் மற்றும் பலவற்றை ‘பேட்டைக்காளி’யில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது ஜல்லிக்கட்டு விளையாட்டின் உணர்வுப்பூர்வமான தருணம் என்றால் அது காளை வளர்ப்பவர்களின் அன்பு மற்றும் அதை விளையாட்டில் அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பு இவற்றைச் சொல்லலாம். இதை ‘பேட்டைக்காளி’யில்விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளதாக படக்குழு கூறுகிறது’மேற்கு தொடர்சி மலை’படத்தின் நாயகன் அந்தோணி இந்த இணையத்தொடரில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்ஆஹாவின் CEO அஜித் தாக்கூர் இந்த நிகழ்வில் பேசுகையில்,

 “நல்ல தரமான, பலதரப்பட்டபொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்வையாளர்களுக்குவழங்க வேண்டும் என்று விரும்புகிறோம்தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்றபடியான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்குவதில்  ஆஹாவை பொறுத்தவரை ‘பேட்டைக்காளி’ இணையத்தொடரை மிகப் பெரிய முன்னெடுப்பாக கருதுகிறோம். இதற்கு முன்பு நாங்கள் வெளியிட்ட ‘அம்முச்சி கிராமம்’ நம் நினைவுகளில் இருந்த நம் பாட்டி ஊருக்கு மீண்டும் அழைத்து செல்வது போன்ற உணர்வை கொடுத்தது. ’பேட்டைக்காளி’ நம் இரத்தமும் வியர்வையும் கலந்த தமிழின் பெருமையைக் கூறுவதாகும். சுவாரஸ்யமான முன்மாதிரியை கொண்ட இந்தக் கதை பற்றி விரைவில் தமிழ் பார்வையாளர்கள் தெரிந்து கொள்வார்கள்” என்று அவர் பேசினார். இணைய தொடரின்இயக்குநரான La. ராஜ்குமார் ‘பேட்டைக்காளி’ உருவாக்கம் குறித்து பேசுகிறபோது
“முன்பெல்லாம் மனிதர்கள் காடுகளில் அலைந்து திரிந்தனர். அதன் பிறகு காளைகள் அவர்கள் வாழ்வில் வந்த பிறகுதான் அவர்கள் விவசாயத்தையும் காளைகள் வளர்ப்பது குறித்தும் கற்றுக் கொண்டனர். எனவே, காளைகள் வந்த பிறகுதான் மனிதர்களின் வாழ்வில் கலாச்சாரம் மெல்ல வளரத் தொடங்கியது. ஆதிகாலத்தில் மனிதர்கள் காளைகளை அடக்கியது இப்போதும் நம் கலாச்சார விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில்தான் நடக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில் இதுவரை சொல்லப்படாத கதைகளை ஆராயவும் இந்த இணையத் தொடரை உருவாக்கியுள்ளோம்” என்றார்.