பொன்னியின் செல்வன் ஆடியோ உரிமை சாதனை விற்பனை

பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் பல மொழி முன்னணி கதாநாயகர்கள் நடித்தனர் இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் சாதனை வசூலை நிகழ்த்திய படமாக மாறியதற்கு காரணம் பல கதாநாயகர்கள் ஒன்றினைந்து நடித்ததுதான் காரணம் என கூறப்பட்டதுலைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தில் விஜய்சேதுபதி, சிலம்பரசன்,அருண்விஜய், அரவிந்தசாமி என ஹீரோக்களை ஒருங்கினைத்தார் படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது
வரலாற்றுபுனைவுகள் நிரம்பிய கல்கியின்” பொன்னியின் செல்வன்” படத்தில் தமிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவம் உள்ள விக்ரம்,கார்த்தி, விக்ரம்பிரபு, மற்றும் திரிஷா, ஐஸ்வர்யா, பிரகாஷ்ராஜ், ஜெயராம் ஆகியோர் நடித்திருக்கின்றனர் படத்தின் பட்ஜெட் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 1000 ம் கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளதுமேலும் பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தபின் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ உரிமையை வாங்குவதற்கு முன்னணி ஆடியோ நிறுவனங்கள் அனைத்தும் முயற்சித்ததாக கூறப்படுகிறதுதமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் இவ்வளவு விலைக்குஆடியோ உரிமை வியாபாரம் ஆனது இல்லை என்று கூறப்படுகிறது பாகுபலி
பிரபாஸ்கதாநாயகனாகநடித்து
வரும்  சலார் படத்தின் ஆடியோ உரிமை19 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது சாதனையாக கூறப்பட்டு வந்த நிலையில்
தற்போது சல்மான்கான் நடித்து வரும் ஒரு புதிய படத்தின்
ஆடியோ உரிமை 21 கோடி ரூபாய்க்குவாங்கப்பட்டு சலார் படத்தின் சாதனை முறியடிக்கப்பட்டது மேற்கண்ட இரண்டு சாதனைகளயும் பின்னுக்கு தள்ளி பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ உரிமையை24 கோடி ரூபாய்க்கு டிப்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் அதிக விலைக்கு விற்க்கப்பட்ட படமாக பொன்னியின் செல்வன் படம் உள்ளது