தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகையான சோபிதா துலிபாலா, ‘பொன்னியின் செல்வன்’ தமிழ்படத்தில் வானதியாக நடித்ததன் மூலம்பிரபலமானார்.
அனுராக் காஷ்யப் இயக்கிய அவரது முதல் படமான ‘ராமன் ராகவ் 2.0’ படத்தில் அவரது நடிப்பு, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டார். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ‘குரூப்’ மற்றும் தெலுங்கில் ‘கூடாச்சாரி’, ‘மேஜர்’ போன்ற படங்களில் நடித்தசோபிதா, தேவ் படேல் இயக்கிய ஆஸ்கார் விருது பெற்ற ஜோர்டான் பீலேவுடன் இணைந்து யுனிவர்சல் பிக்சர்ஸின் தயாரிப்பான “மங்கி மேன்” என்ற த்ரில்லர் படத்தில் அவர் அறிமுகமாகிறார்.
Related Posts
சமீபத்தில் வெளியிடப்பட்ட “மங்கி மேன்” திரைப்படத்தின் ட்ரெய்லர் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.