மயோன் சிறப்பு பார்வை

விக்ரம் படம் வெளியான பின்பு கடந்த மூன்று வாரங்களில் சூன் 17 அன்று வெளியான வீட்ல விசேசம் திரைப்படம் மட்டுமே வசூல் கிடைக்கும் படமாக தியேட்டரில் ஓடிக்கொண்டுள்ளது இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான படங்களில் மயோன் படம் தனித்த கவனத்தை பெற்றுள்ளது வணிகம், அது சார்ந்த லாப நோக்கங்களை பிரதானமாக கருதாமல் எடுத்துக் கொண்ட திரைக்கதையை காட்சிப்படுத்தி,திரைப்படமாக்கியிருக்கிறார்கள்

அறிவியலின் உதவியால் கோயிலுக்குள் நுழைந்து புதையலைத் தேடும் பயணம் தான் ‘மாயோன்’ படத்தின் ஒன்லைன். இது போன்ற படங்கள் தமிழில் ஏற்கனவே வந்திருக்கிறது அவை எல்லாம் திருட்டை மையமாக கொண்டவை ஆனால்மயோன் திரைப்படம் ஆன்மீகத்தையும், அறிவியலையும் இணைக்க முயற்சிக்கிறது, இந்தியாவில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் சிலை திருட்டில் ஈடுபடுவதையும் காட்சிப்படுத்தியிருக்கிறது
பழமையானகோவில் ஒன்றில் புதையல் இருப்பதை ஓலைச்சுவடிகள் மூலம் தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கண்டுபிடிக்கிறார் பழமையான கோவில்களில் இருக்கும் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கும் அவர், புதையலை கண்டறிந்து வாழ்வில் செட்டிலாகிவிட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். அவரது திட்டத்தில் சிபிராஜும் இணைந்துவிட இறுதியில் புதையலை கண்டறிந்தார்களா? இல்லையா? என்பது தான் ‘மாயோன்’ படத்தின் ஒருவரி கதை
ஒரு திரைப்படம்தான் எடுக்கிறோம் என்று நினைக்காமல் ஆராய்ச்சி மாணவர் போன்று பழமையான கோவில்கள், அவற்றின் அமைப்புகள், அதில் உள்ள ஆச்சர்யங்கள் அதற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்புகளை
 காட்சிப்படுத்தும் வகையில் கதை, திரைக்கதையை உருவாக்கியுள்ளார்
கதையாசிரியரும், தயாரிப்பாளருமான அருண்மொழி மாணிக்கம் இதுவரை தமிழ் சினிமா கோவில்கள் பற்றி பதிவு செய்த பார்வைகளை இந்தப்படம் புதிய பார்வையுடன் ரசிகனை பார்க்க வைத்திருக்கிறது
அறிவியலை நம்புகின்றவர்கள், ஆன்மிகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் என இருதரப்பினர் இருப்பது போல காட்டப்படுகிறது. ஆனால் இதில் எது  உண்மை என்ற எந்தவித முடிவையும் சொல்லாமல் பார்வையாளர்கள் முடிவுக்கு விட்டுவிடுகின்றனர்.அறிவியலையும், ஆன்மிகத்தையும் அதற்குரிய காரணங்களை தொடர்புபடுத்திஇருவேறு கதாபாத்திரங்களின் வழியே படம் நெடுக பேசியிருப்பது தமிழ்சினிமாவிற்கு புதிது
தொல்லியல் துறையில் வேலை செய்யும் துடிப்புமிக்க அதிகாரி சிபிராஜ், அந்த துறையிலேயே பணியாற்றும் கதாநாயகியாக தான்யா, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மாரிமுத்து, மற்றும் ராதாரவி, பக்ஸ், ஹரீஷ் பெரடி , பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர்
மயோன் மலை பகுதியில் உள்ள பழமையான கோவில் அதனை இந்திய தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கே.எஸ்.ரவிக்குமார் தலைமையில்ஆய்வை மேற்கொள்கிறது ஒட்டுமொத்த திரைக்கதையும் மாயோன் மலை, கோவிலை சுற்றியே நகர்வதால் அதற்குள்ளாகவே காட்சிகள் மூலம் பார்வையாளனுக்கு விறுவிறுப்பான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் என்.கிஷோர் அவரது முயற்சிக்கு ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு முழுமையாக உதவியிருக்கிறது எது நிஜக்கோவில், எதுஅரங்கம் என்பதை அறிய முடியாத வகையில் கலை இயக்குநர் பாலசுப்பிரமணியன்  உழைத்திருக்கிறார் இது போன்ற படங்களுக்கு பிண்ணனி இசை என்பது உயிர் மூச்சு போன்றது அதனை முழுமையாக்கி உள்ளார் பாடல்கள் எழுதி இசை அமைத்திருக்கும் இளையராஜா
தமிழ் சினிமாவில் வணிக நோக்கத்தை கடந்து தயாரிக்கப்பட்டிருக்கும் படம்மாயோன்