மலையாள சினிமா நட்சத்திர நடிகர் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானபுஷ்பா படத்தின் மூலம் அகில இந்திய அளவில் கவனம் பெற்றார். விக்ரம் மாமன்னன் படங்களிலும் நடித்து இருந்தார். அவருக்கு என்று தமிழ்நாட்டில் ரசிகர் வட்டாரம் இருப்பதுடன் அதிகரித்தும் வருகிறது. அவரைப் போன்று தமிழ், தெலுங்கு சினிமாக்களில் தனது தனித்துவமான நடிப்பால் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கொடி பறந்து வருகிறது. ரகுவரன், பிரகாஷ் ராஜ் ஆகியோருக்கு பின் வில்லன் நடிகரின் கால்ஷீட் தேதியை பொறுத்து கதாநாயகர்களின் கால்ஷீட் ஒதுக்கீடு செய்யப்படும் அளவில் எஸ்.ஜே.சூர்யாவின் தேவை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் விபின் தாஸ், பகத் பாசில் நடிக்கும் மலையாளபடத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பை புகைப்படம் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இது எஸ்.ஜே.சூர்யா மலையாளத்தில் நடிக்கும் முதல் படமாகும்.