மாதவனை பாராட்டிய ரஜினிகாந்த்
நடிகர் மாதவனைரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ராக்கெட்ரிநம்பி விளைவுஎன்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார் மாதவன். கடந்த ஜூலை 1-ம் தேதி வெளியான இந்தப் படம், பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான கதைகளை போலன்றி, அர்ப்பணிப்புடன் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களும், அவமானங்களும், அதிலிருந்து மீண்டுவர தன்னை நிரபராதி எனஅவர் நடத்திய சட்டப் போராட்டங்களுமேகதைக்களமாக எடுக்கப்பட்டிருப்பது இந்திய சினிமாவில் முதல் முறை என்றே கூறலாம்
வணிகம், லாபநோக்கத்துடன் முதலீடு செய்யப்படும் இந்திய சினிமாவில் மசாலாத்தனம் இல்லாமல் எடுத்துக்கொண்ட திரைக்கதைக்கு நேர்மையாக மாதவன் பணியாற்றியிருக்கிறார் என இந்திய ஊடகங்கள் பாரபட்சம் இன்றி பாரட்டியிருக்கின்றனர் திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து மாதவனையும், படத்தையும் பாராட்டி வருகின்றனர்
Related Posts
இந்நிலையில் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்தையும், மாதவனின் நடிப்பு மற்றும் இயக்கத்தையும் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். தலைச்சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக மாதவனும் தனது அறிமுகப் படத்திலேயே இயக்குநராக நிரூபித்திருக்கிறார் எனவும், இளைஞர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.