தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் ‘மாயோன்’.எளிதில் யூகிக்க இயலாத திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்சங்களால் ‘மாயோன்’ திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றது.தமிழகம் முழுவதும் ‘மாயோன்’ திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறதுஎதிர்பார்த்ததைவிட கூடுதல் வரவேற்புமாயோன் திரைப்படத்திற்கு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர், பட குழுவினரை அலுவலகத்திற்கு வரவழைத்து, வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடினார்கள்
இந்த நிகழ்வில் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கச் சங்கிலியொன்றை பரிசளித்தார்.தமிழில் ‘மாயோன்’ திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்ததால், வரும் ஜூலை 7-ம் தேதியன்று தெலுங்கில் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.இதையடுத்து ‛மாயோன் 2′ உருவாகும் என அறிவித்துள்ளனர். இதற்கான போஸ்டரை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். முதல்பாகத்தில் தொடர்ந்த கூட்டணியே இரண்டாம் பாகத்திலும் தொடர உள்ளனர். முதல்பாகத்தில் கிருஷ்ணர் கோயில் பின்னணியில் படம் எடுத்தனர். இரண்டாம் பாகத்தில் முருகனை பின்னணியாக வைத்து படம் எடுக்க உள்ளனர். அதனை உணர்த்தும் வகையில்படக்குழு வெளியிட்ட ‛மயோன் 2′ போஸ்டரில் முருகன் சிலை, வேல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளனர். மாயோன் 2 படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.