மாரி செல்வராஜ் இயக்கும் படத்தின் பெயர்
பைசன் காள மாடன் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
“கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்…
என்று மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் முதல்போஸ்டரை வெளியிட்டு கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விக்ரம் மகன்துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படம் பரியேறும் பெருமாள், அதனை தொடர்ந்து அசுரன், கர்ணன், ஆகிய மூன்று படங்களும் கல்வியின் முக்கியத்துவம், தலித் மக்களின் உரிமைகளை பேசிய படம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, நடித்த படம் மாமன்னன் 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அரசியல் உயர்பதவிகளுக்கு தலித் தேர்வு செய்யப்பட்டாலும் சாதி ஆதிக்கம் அவர்களை அடக்கி ஆள முயற்சிப்பதை தோலுரித்து காட்டிய படம். இப்படத்தைத் தொடர்ந்து ‘வாழை’ என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கிவந்தார். குழந்தைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று வெளியிடப்பட்டுள்ள பைசன்
காளமாடன் படத்தின் முதல் போஸ்டரில்மிகப்பெரிய காளை சிலைக்கு முன்னால் நாயகன் துருவ் விக்ரம் அமர்ந்திருப்பது போன்று இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜின் முந்தைய படங்களில் சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றியிருந்த நிலையில், இப்படத்தில் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.