சினிமா ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட ‘கன்னி மாடம்’ படத்தை இயக்கிய நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கும் புதிய படத்திற்கு மா.பொ.சி. என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை எஸ்.எஸ்.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் சிராஜ் தயாரிக்கிறார்.இந்தப் படத்தில் விமல் நாயகனாகவும் சாயா தேவி நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் ரமா, பருத்தி வீரன் சரவணன், ஜனா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.திரைப்படத்தின் பூஜை சென்னையில் தான் நடைபெறும் ஆனால் இந்த படத்தின் இயக்குநர் போஸ் வெங்கட் சொந்த ஊரான அறந்தாங்கியில் நேற்று நடைபெற்றது அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோஸ் வெங்கட் நான்பிறந்த ஊர் அறந்தாங்கி இங்கு பூஜை நடைபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது சிறுவயது கனவு நிறைவேறியது தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இருவருக்கும் நன்றி.இந்தப் படம் பற்றியும், படத்தின் தலைப்பினால் எழுந்துள்ள கேள்விகள்பற்றியும் இயக்குநர் போஸ் வெங்கட் பேசுகையில், ம.பொ.சி.’ என்றதும், ‘மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்’ என்ற பெயர்தான் தமிழர்களின் நினைவிற்கு வரும். ஆனால், தலைப்பு அதுவல்ல. ‘ம’ என்ற எழுத்தோடு துணைக் கால் சேர்த்து ‘மா’ என்று தலைப்பு போட்டதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதைத் தெளிவுபடுத்த இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.முதலில் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்றுதான் இந்தப் படத்திற்கு பெயர் வைத்திருந்தோம். அது பெரிய தலைப்பாக இருக்கிறது என்று சுருக்கி இப்போது மா.பொ.சி.’ என்று வைத்திருக்கிறோம்.ஒருவேளை மறைந்த சிலம்பு செல்வர்‘ம.பொ.சி’ அவர்களை இத்தலைப்பு நினைவுபடுத்தினால் அதுவும் தமிழுக்குச் செய்யக் கூடிய நல்ல விஷயமாகத்தான் இருக்கும். நிச்சயமாக அவர் பெயரை பன்மடங்கு பெருமைப்படுத்தும்விதமாகத்தான் இப்படம் இருக்குமே தவிர, கலங்கப்படுத்தும் படமாக இருக்காது.அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது. கல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இது. இப்படம் ம.பொ.சி. ஐயா அவர்களை போற்றக் கூடிய படமாகத்தான் இருக்கும்.. என்றார்.