முதல் வரை முன்மொழிந்த பார்த்திபன்

  • இரவின் நிழல் குழுவுக்கு வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் ட்வீட் செய்துள்ள நடிகர் பார்த்திபன் “நன்றி சின்னவரே” என பதிவு செய்துள்ளார்.

மாறுபட்ட கதைகளத்தையும் இயக்கத்தையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர்களில் பார்த்திபனும் ஒருவர் இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் வெற்றிதோல்வி எதுவாக இருந்தாலும் படைப்புரீதியாக தனித்துவம்மிக்கதாக இருக்கும் அதேபோன்று படத்திற்கான விளம்பரங்களும் புதுமையாகவே இருக்கும் படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காத சூழலில் பார்த்திபன்

இயக்கத்தில் வெளியானஒத்த செருப்பு படைப்புரீதியாகமாபெரும் வெற்றி பெற்றது. இதில் இவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். உலக அளவில் கலைஞர்களின் பாராட்டைப் பெற்ற இப்படம் இந்திய அரசின்தேசிய விருதையும் வென்றது.அதோடு இந்தியிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பார்த்திபனுக்கு பதிலாக அபிஷேக் பச்சன் நாயகனாக நடித்து வருகிறார். இளையராஜா இசையமைக்கிறார்
இந்த படத்தை தொடர்ந்து தற்போது பார்த்திபன் “இரவின் நிழல்” என்னும் படத்தை இயக்கியுள்ளார்
பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரகதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்ட படம் என்னும் சாதனையை நிகழ்த்தியுள்ளது இரவின் நிழல்
படம் வெளியாகும் முன்னரே  எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த படம் 90 நாட்கள் ஒத்திகைக்குப் பிறகு ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 15ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள்  நடைபெற்று வருகிறது. சமீபத்தில் “பாவம் செய்யாதிரு” என்ற பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். நிரஞ்சனா ரமணன் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
இந்நிலையில் இரவின் நிழல் படத்திற்கு நடிகரும், திமுகவின் இளைஞர் அணி தலைவரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்து இருந்த பார்த்திபன், “சாதல் சாதாரணம்.
சாதித்தல் அசாதாரணம்  அதற்கான முயற்சியும்
உழைப்பும் சதா ரணம். கண்டுணர்ந்து
பாராட்டுதல் பெருங்குணம்
உயர்த்திப் பிடிக்க உதவுதல் உயர்குணம்.
இந்நிமிட கடைசி முதல்,
அடுத்த முதல் வரை அங்கீகாரமே ஆக்ஸிஜன். நன்றி சின்னவரே!  என கூறியுள்ளார்.