கடந்த வருடம் பொங்கல் வெளியீடாகஜனவரி 11 அன்று அஜீத்குமார் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு படங்கள் நேருக்கு நேர் மோதின. இரண்டு படங்களும் வசூல் அடிப்படையில் பிரம்மாண்டமான வெற்றியை பெற முடியவில்லை. அதே நேரம் அஜீத்குமார், விஜய் படங்களுக்கான இயல்பான, நியாயமான வசூல் திரையரங்குகள் மூலம் கிடைத்தன. இந்த வருடம்ஜனவரி 2024 பொங்கல் போட்டியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படங்கள் நேரடியாக மோதுகின்றன. இந்த படங்களுடன் அருண்குமார், விஜய் சேதுபதி நடித்த படங்கள் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தாலும் திரையரங்குன் மத்தியில் அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமையும், அமோக வரவேற்பும் இருக்கிறது. இரண்டு படங்களும் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அதாவது ஜனவரி 25 வரை திரையரங்குகளில் ஓட்டப்படவேண்டும் என்கிற வேண்டுகோளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன. இரண்டு படங்களுமே அதிகபட்சமாக 9000ம் திரைகள் வரை திரையிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. படம் நன்றாக இருந்தால் மூன்றாவது வாரமும் திரையரங்குகளில் இருந்து தூக்கமுடியாது. எஞ்சிய திரையரங்குகளில் விஜய்சேதுபதி நடித்துள்ள மேரி கிறிஸ்துமஸ் அருண்விஜய் நடித்துள்ள சேப்டர் மிஷன், தெலுங்கில் தயாராகியுள்ள ஹனுமான் ஆகிய படங்கள் திரையிடப்படக்கூடும். இந்த நிலை புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய இயலாது. ஆனால் ஜனவரி 25 அன்று அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் ப்ளு ஸ்டார்,வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.