யாதும் ஊரே யாவரும் கேளீர் – பிச்சைக்காரன் சாதித்ததா?

இந்த வார வெளியீடாக யாதும் ஊரே யாவரும் கேளீர், பிச்சைக்காரன் – 2 திரைப்படங்கள் தமிழ்நாடு திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறை காலமான மே மாதம் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும். இந்த வருட கோடை விடுமுறையில் மே மாதாம் இதுவரை வெளியான எந்தப்படமும் பாக்ஸ்ஆபீஸில் கல்லா கட்டாமல் திரையரங்குகள் காலியாக ஒவ்வொரு நாளையும் கடந்துபோகிறது. வியாபார முக்கியத்துவம், கோடிகளில் சம்பளம் வாங்கும் நட்சத்திர நடிகர்களான விஜய்சேதுபதி, விஜய்ஆண்டனி நடித்த படங்கள் திரையரங்குக்கு மக்களை கொண்டுவரும் என்கிற எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்றால் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடன் உதவி இயக்குநராக இருந்த வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளீர்படம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு ஒருவழியாக நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அகதிகள் நசுக்கப்படுவதையும், நிலம் என்பது யாருக்கும் சொந்தமல்ல என்பன உள்ளிட்ட ஆழமான விஷயங்களை ட்ரெய்லரில் பேசிய இப்படம், திரைக்கதையில் அதற்கான நியாயத்தை சேர்த்ததா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்கள் அரசியலை முழுமையாக அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் திரைக்கதை அமைப்பது இல்லை இதனால் அரசியல் சார்ந்த திரைப்படங்கள் படம் பார்க்க வரும் பார்வையாளனுடன் கனெக்ட் ஆவது இல்லை அதனாலேயே அரசியல் சார்ந்த படங்கள் தமிழில் பெரும்பான்மையாக தோல்வி அடைகின்றன. அந்த வரிசையில் இடம்பெறுகிறது யாதும் ஊரே யாவரும் கேளீர் சர்வதேச அரசியலுடன் தொடர்புடைய அகதிகள் பிரச்சினை குறிப்பாக உலகம் முழுவதும் பரவி இருக்கும் இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மட்டுமே குறுகிய வட்டத்திற்குள் பேசுவதால் பார்வையாளனை ஈர்க்கவில்லை. அதனால் விஜய்சேதுபதி ரசிகர்களே திரையரங்கை நோக்கி வரவில்லை என்பதுடன் குறைந்தபட்ச ஓபனிங்கு படத்திற்கு இல்லை என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். தமிழ்நாடு முழுவதும் 1.50 கோடி ரூபாய்க்கு குறைவாகவே இந்த படம் மொத்த வசூல் செய்துள்ளது.

2016ல் வெளியானபிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு பின் விஜய்ஆண்டனி கதாநாயகனாகநடித்த எந்தப்படமும் அதற்கு இணையான மொத்த வசூலை கடந்த 6 வருடங்களாக எட்டிப்புடிக்க முடியவில்லை. இந்த நிலையில் பிச்சைக்காரன்-2 படத்தை கதை திரைக்கதை, வசனம் எழுதி விஜய்ஆண்டனி கதாநாயகனாக நடித்து இசையமைத்து, இயக்கியுள்ள பிச்சைக்காரன் – 2 படத்தை நேற்றையதினம் தமிழ்நாடு முழுவது ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டுள்ளது.இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி(விஜய்குருமூர்த்தி). அவரது நெருங்கிய நண்பர்கள்இணைந்து விஜய் குருமூர்த்தியின் உடலில் வேறொருவரின் மூளையை பொருத்தி அதன் மூலம் சொத்தை அபகரிக்க திட்டமிடுகின்றார். இந்த சதித் திட்டத்தில் வந்து மாட்டிக்கொள்கிறார் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தும் விஜய்ஆண்டனி(சத்யா) திட்டமிட்டப்படி சத்யாவின் மூளை, குருமூர்த்தியின் உடலுடன் பொருத்தப்பட அவர்களின் சதித் திட்டம் பலித்ததா? சத்யாவுக்கான பின்னணி என்ன? – இதுதான் திரைக்கதை. இப்படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட விபத்தில் அவர் தப்பிபிழைத்தது படத்திற்கான இலவச விளம்பரமாக மட்டுமின்றி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் அவுட்ரேட் முறையில் வியாபாரம் ஆகவில்லை என்பதால் ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் திரையரங்குகளில் படம் வெளியான நேற்று ஓபனிங் இருந்தது ஆனால் எதிர்வரும் நாட்களில் இது தொடருமா, கல்லாகட்டும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்கிறது தியேட்டர் வட்டாரம். சினிமா கற்பனை கலந்தது என்றாலும் திரைக்கதையில் குறைந்தபட்ச நேர்மையும், நியாயமும் இருக்க வேண்டும். இந்தியாவில் நிலவும் வர்க்கபேதம், பொருளாதார ஏற்றதாழ்வுக்கான காரணம் பணக்காரர்கள் தான் காரணம் அவர்களிடம் இருக்கும் தேவைக்கு அதிகமான சொத்துக்களை மக்களுக்கு வழங்கிவிட்டால் ஏழை பணக்காரன் இருக்க மாட்டார்கள் என்கிற தவறான அரசியல் புரிதலை படம் முழுவதும் பிரச்சாரமாக முன்வைக்கப்படுவது பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆகவில்லை அதனால் வெகுஜன படமாக மாறுவதற்காாான வாய்ப்பு இல்லை என்கின்றனர்.நேற்றையதினம் தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது பிச்சைக்காரன் – 2.