மௌன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமாரின் மூன்றாவது படமாக வெளியாகியுள்ளது ‘ரசவாதி’. 2011ஆம் ஆண்டு திரையுலகில், விமர்சகர்கள் மத்தியில் அதிகம் விவாதத்திற்குள்ளான படம் மௌனகுரு தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்தில் கவனம் ஈர்த்த சாந்தகுமார் இயக்கிய இரண்டாவது படமான ’மகாமுனி’ படம் வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள
முக்கால்வாசி படம் எதை நோக்கிப் போகிறது, ஹீரோவின் நோக்கம் என்ன? வில்லனின் நோக்கம் என்ன? என எதுவும் தெரியாமல், கதை எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் தன்மையை காட்ட எதற்காக இத்தனை காட்சிகள் என்று தெரியவில்லை. நாயகன் நல்லவர் என்றும், வில்லன் ஒரு சைக்கோ என்பதையும் காட்ட ஓரிரு காட்சிகள் போதாதா? அவற்றை திரும்பத் திரும்ப ஆடியன்ஸுக்கு பாடம் எடுப்பது போல விளக்கிக் கொண்டிருப்பது சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அர்ஜுன் தாஸ் – தன்யா ரவிச்சந்திரன் இடையிலான காதல் காட்சிகளிலும் வலுவில்லை.
சுஜித் சங்கர் – விஜே ரம்யா இடையிலான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அதேபோல ஹீரோவின் பின்னணிக்கும், வில்லனின் பின்னணிக்கும் இடையே கிளைமாக்ஸில் முடிச்சு போட்ட விதம் சிறப்பு.படம் முழுக்க கவனிக்க வைக்கும் ஒரே அம்சம் வில்லனாக வரும் சுஜித் சங்கரின் நடிப்பு. சிறுவயதில் குடும்ப வன்முறை சூழலில் வளரும் குழந்தை எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினை எப்படி வளர்ந்தபிறகும் அவனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தனது சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். நாயகன் அர்ஜுன் தாஸின் இறுகிய முகமும், குரலும் இயல்பாகவே அவரை இந்த கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்துவிடுகின்றன.நாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரன், நாயகன் நண்பனாக கல் குவாரியை எதிர்க்கும் கேரக்டரில் வரும் ரிஷிகாந்த், மனநல மருத்துவராக வரும் விஜே ரம்யா, ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர். பிளாஷ்பேக்கில் சிறிதுநேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ்.
புகழ்பெற்ற எழுத்தாளார் பாவ்லா கோய்லோ எழுத்தில் 1988-ஆம் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமான கிளாசிக் நாவல் ‘ரசவாதி’ (The Alchemist). ஆனால், அந்த நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இயக்குநர் படம் தொடங்கப்பட்ட போதே தெளிவுப்படுத்திவிட்டார். அப்படி இருந்தும் இந்த படத்துக்கு எதற்காக இந்த பேர் என்று கேட்டால், படத்தில் ஒரே ஒரு இடத்தில் பாதரசத்தை வைத்து அம்மியில் அரைத்துக் கொண்டிருக்கும் நாயகன், அதைப் பற்றி தன்னுடைய குருவிடம் கேட்கிறார். அதுதான் ‘ரசத்துக்கும்’ இந்த படத்தின் டைட்டிலுக்கும் உள்ள ஒரே தொடர்பு.
சுவாரஸ்யமான ஒரு ஒன்லைனை எடுத்துக் கொண்டாலும், அதற்கேற்ற பலமான திரைக்கதை இல்லாததால் பரபரப்பான த்ரில்லராக வந்திருக்க வேண்டிய ‘ரசவாதி’ ஈர்க்க தவறுகிறது.