இந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இன்றளவும் கொண்டாடப்படும் அமிதாப்பச்சன்தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்ட ரஜினிகாந்த் இருவரும் 1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஹும்’ (HUM) படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதனால் தற்போது ரஜினிகாந்த், ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் படத்தின்மீது அனைவரது கவனம் திரும்பியுள்ளது. ரஜினியின் 170வது படமாக தயாராகவிருக்கும் இதற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் கேட்கப்பட்டதுவிக்ரம் தரப்பிலிருந்து நடிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்று செய்திகள் வெளியானது .அதனால்ரஜினிகாந்த்துக்கு இணையான அந்த கேரக்டரில் நடிக்க அமிதாப் பச்சனிடம்கதை சொல்லப்பட்டுள்ளது கதை கேட்ட அமிதாப்பச்சன் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார் என இயக்குநர் த.செ.ஞானவேல்ராஜா வட்டாரம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
Sign in