இந்த நேரத்தில் அந்த ஊரின் காட்டுப் பகுதியில் இருந்து அந்த ஊருக்குள் வரும் ஒரு சின்ன யானை, காலில் அடிபட்டு கஷ்டப்படுகிறது. அந்த யானையுடன் மிகவும் நெருக்கமாகிறார் சிறுவன் ஆர்வா.
இதைப் பார்த்து மகிழ்ந்துபோன அப்பா நாசர் அந்த யானைக்கு பீமா என்ற பெயர் சூட்டி தன் வீட்டிலேயே அதை வளர்த்து வருகிறார். இதற்காக முறைப்படி வனத்து றையிடமும் அனுமதி கேட்டு வாங்கி வைத்திருக்கிறார்.
இப்பொழுது ஆரவ் வாலிபராக தன்னுடைய குடும்பத்தின் சினிமா தியேட்டரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் இருக்கிறார். அதேபோல் உள்ளூரில் வேலை செய்யும் நாயகியையும் ஒரு பக்கம் காதலித்துக் கொண்டிருக்கிறார்.
அதே ஊரை சேர்ந்த கே.எஸ்.ரவிக்குமார் இப்போது மாநில அமைச்சர். ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை உள்ளவர். அவருக்கு ஒரு ஜோதிடர் சொன்ன ஒரு அறிவுரையின் பேரில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த யோகி பாபுவை அழைத்து வந்து தன்னுடைய வீட்டில் தங்க வைத்து தன்னுடைய மகன் என்று சொல்லி தினமும் அவரிடத்தில் “மகனே” என்று பாசத்துடன் பேசி பழகுகிறார். அடுத்த 18 நாட்கள் இப்படி இருக்க வேண்டும் என்பது ஜோதிடரின் உத்தரவு.
அதே சமயம் கே.எஸ்.ரவிக்குமாருக்கும், மாநிலத்தின் முதலமைச்சர் சாயாஜி ஷிண்டேவுக்கும் இடையில் மோதல் நடந்து வருவதால் எந்த நேரமும் அமைச்சரின் பதவியை பறிபோகும் நிலை இருக்கிறது. தன்னுடைய அமைச்சர் பதவி பறிபோகாமல் இருக்க ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டு அதை செயல்படுத்தலாம் என்ற முனைகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
கடத்தல் கும்பலுடன் நாயகன் ஆரவ் மோதிய காரணத்தால் அவர் வளர்த்து வரும் பீமா யானையை சரி வர கவனிக்கவில்லை என்று பொய் காரணம் சொல்லி அந்த யானையை யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்துச் செல்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.
தான் இல்லாத போது தன்னுடைய யானையைஅழைத்துச் சென்றுவிட்டார்கள் என்ற கோபத்தில் ஆரவ் முகாமுக்கு வந்து பீமாவைத் தேடுகிறார். அங்கே பீமா யானை இல்லை. ஆனால் வேறொரு யானையை காட்டி இதுதான் உன் பீமா யானை என்று சொல்கிறார்கள் வனத் துறை அதிகாரிகள். இது என் பீமா இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்லும் ஆரவ், தன் பீமாவை தேட துவங்குகிறார்.
இறுதியில் அவருடைய யானை கிடைத்ததா.. யானைக்கு என்ன ஆனது… கே.எஸ்.ரவிக்குமார் என்ன பரிகாரம் செய்தார்.. அவரும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா… இல்லையா… என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம் என்பதால் ஹீரோ ஆரவ் அப்போதைய காலகட்டத்தில் எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இதில் படத்திலும் தென்படுகிறார். நாயகன் என்று சொல்ல முடியாது. ஆனால் மிகப் பெரிய அளவுக்கு அடிதடி எல்லாம் செய்யக் கூடிய அளவுக்கான நாயகன் என்று அவரை இந்தப் படத்தில் அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.
அதேபோல் நடிப்பும் வரவில்லை. அவ்வளவாக இவருக்கு காட்சிகளும் இல்லை. இருக்கும் காட்சிகளிலும் காட்சி கோணங்களும் அப்படி வைக்கப்படவில்லை.
படத்தின் நாயகி அஷ்மா நார்மலுக்கு மிக அதிகமான காட்சிகள் இல்லை.
படத்தில் அதிகக் கவனத்தை ஈர்த்திருப்பது யோகி பாபுவும், கே.எஸ்.ரவிக்குமாரும்தான். அதிலும் கே.எஸ்.ரவிக்குமார் அவருடைய அரசியல் சித்து விளையாட்டுகளை எல்லாம் பேசும்போதும், சொல்லும்போதும்.. தன்னுடைய கையில் எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை சொல்லி தன்னை தூக்கினால் மொத்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற எச்சரிக்கும்போதும் மிக எதார்த்தமான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார்.
யோகி பாபு நேற்று பிச்சை எடுத்துவிட்டு இன்றைக்கு ஒரு அமைச்சரின் வீட்டில் சகல செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருப்பவர். தன்னுடைய தலைக்கு மேல் கத்தி இருப்பதையும், தன்னுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன… என்பதைக்கூட கொஞ்சம் உணராமல் அவர் செய்கின்ற அலட்டல்கள் கொஞ்சம் நகைக்க வைக்கிறது. ஆனால், இடைவேளைக்கு பின்பு யோகி பாபுவை அம்போவென்று விட்டுவிட்டார்கள்.
அப்பாவாக நடித்திருக்கும் நாசரும், முதலமைச்சராக நடித்திருக்கும் சாயாஜி ஷிண்டேயும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு மேற்கு தொடர்ச்சி மலையின் காட்டுப் பகுதியை சல்லடையாக காண்பித்திருக்கிறது.
சைமன் கே.கிங்கின் இசையில் ஓவியா பாடல் ஒன்று மட்டும் மனதில் நிற்கிறது. மற்றவைகள் வந்து சென்றதே நமக்கு தெரியவில்லை.
இந்தப் படத்தில் எதுவுமே புதிதாக இல்லை. நானும் ஒரு படம் எடுத்து விட்டேன் என்று சொல்லி இயக்குநரும், நாங்களும் ஒரு படத்தில் நடித்துவிட்டோம் என்று சொல்லி நடிகர், நடிகைகளும் நடித்திருக்கிறார்கள் என்றுதான், இந்தப் படத்தை பார்த்த பின்பு நமக்குத் தோன்றிய விஷயம