எம்.ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. “பார்வையாளர்கள் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என இயக்குநர் ராஜேஷ் உறுதியளித்துள்ளார்.
நடிகர் அதர்வா நடிப்பில் கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது ‘பட்டத்து அரசன்’. இந்தப் படத்தையடுத்து அவரது நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. எம்.ராஜேஷை பொறுத்தவரை அவர் இயக்கத்தில் ஹன்சிகா நடித்த ‘மை3’ வெப்சீரிஸ் கடந்த ஆண்டு வெளியானது.
இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தை ஸ்ரீ வாரி பிலிம் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். இப்படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சுகுமாரன் கவனிக்கிறார்.படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, “இயக்குநர் ராஜேஷின் திரைக்கதையில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மென்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது” என்றார்.
இயக்குநர் எம்.ராஜேஷ் கூறும்போது, “காலத்துக்கு ஏற்றாற் போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் என்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுப்பதை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்தப் படம் மூலம் ரசிக்கத்தக்க பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
Prev Post
Next Post