ராயன் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய படம் ராயன் . தனதுதிரையுலக பயணத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 50-வது திரைப்படமான ‘ராயன்’ சூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ராயன் படத்தின் திரைக்கதை அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் இடம்பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று
ராயன் படத்தை தயாரித்துள்ள சன்பிக்சர்ஸ் தனது x தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ராயன் படத்தின் திரைக்கதை, அப்படத்தில் இடம்பெற்ற அதீதமான வன்முறை காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இருந்த போதிலும் படம் வெளியான மூன்று நட்களில் உலகம் முழுவதும் சுமார் 75 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்தது ராயன். 100 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்ததா, அதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்குமா என சினிமா ஆர்வலர்களும், தனுஷ் ரசிகர்களும் எதிர்பார்த்து வந்த நிலையில் ஹாலிவுட்டில் இயங்கி வரும் பாரம்பர்யம் மிக்க
“அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில்” ராயன் படத்தின் திரைக்கதை பட்டியலிடப்பட்டுள்ள தகவலை சன்  அறிவித்து தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளதுசன்பிக்சர்ஸ் .
இதற்கு முன்பு தமிழில்ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங்  திரைக்கதை இதே போன்றுதேர்வாகியதும் குறிப்பிடத்தக்கது.