விக்ரம் பிரபு நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில படப்பிடிப்புபூஜையுடன் 11.02.2025 ஆம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது.இப்படத்தினை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் இயக்குகிறார்.
விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’, ‘லியோ’, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படங்களை, செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். இப்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தைத் தயாரித்து வரும் அவர், இந்தப் படத்தில் அவரது மகன் எல்.கே.அக்ஷய்குமாரை நடிகராக அறிமுகப்படுத்துகிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் எழுதியுள்ள கதைக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ்.
படம் பற்றி இயக்குநர் சுரேஷ் கூறும்போது,
படம் பற்றி இயக்குநர் சுரேஷ் கூறும்போது,
“ இதன் கதையை ‘டாணாக்காரன்’ தமிழ் எழுதியுள்ளார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள கதை. போலீஸ்காரர் விக்ரம் பிரபு, குற்றவாளியான அக்ஷய் குமாரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது நடக்கும் உரையாடல்தான் படம். சிவகங்கை பின்னணியில் கதை நடக்கிறது. இந்தப் படத்துக்காக நடிப்புப் பயிற்சிப் பெற்றுள்ள அக்ஷய் குமார் இந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு இப்போது தொடங்கி இருக்கிறது” என்றார்.