வாழ்க்கையின் சுவாரஸ்யம், வலிகளை கூறும் வட்டம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உட்பட பலர் நடித்துள்ள படம் “வட்டம்”இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது அதனையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது..,
கமலக்கண்ணன் இயக்கிய மதுபானக் கடை திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம். இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்தப் படம் பேசும். நடிகர் சிபி தான் இந்தக் கதையை எடுத்துச் செல்லச் சரியாக இருப்பார் என நினைத்து இந்தப் படத்திற்குள் அவரைக் கொண்டு வர நினைத்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா ஆகியோர் இந்தப் படத்திற்குள் வந்தது மேலும் பலம். படத்தில் பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களும் இந்தப் படத்தை மெருகேற்ற பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன, பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன என்றார்
நாயகன் சிபிராஜ் பேசியதாவது…..,
வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். இந்தக் கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்தக் கதை ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது. இயக்குநர் கமலக்கண்ணன் மற்றும் கவிநயம் இந்தப் படத்தை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது. இயக்குநர் கமலக்கண்ணன், இயக்குநர் மணிவண்ணன் போல கருத்துகள் கொண்டவர்.மிகச் சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியாவின் மிகப்பெரிய இரசிகன், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
இயக்குநர் கமலக்கண்ணன் பேசியதாவது..,,,,,
இந்தப் படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கின்றன. எனது முதல் படம் நிறைய வரவேற்பைக் கொடுத்தது. அந்தப் படத்தில் இருந்து இந்த படம் முழுதாக வேறுபட்டு இருக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்த போது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்யக் கூடிய மன சுதந்திரம் கிடைத்தது. நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இந்தச் சமூகத்தில் அதை விடப் பல திரில்லிங் தருணங்கள் இருக்கின்றன. அது இந்தத் திரைப்படத்திலும் இருக்கிறது. இது எங்கள் எல்லோருடைய படம். ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரைச் சென்றடையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை கருத்தை இந்தப் படம் சொல்ல முயற்சித்து இருக்கிறது.
நடிகை ஆண்ட்ரியா பேசியதாவது..,

ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்தப் படத்தை இவ்வளவு நாள் தாங்கிப் பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவு ஒன்பது மணி தொடங்கி காலை ஆறு மணிவரை காரில் சுற்றினேன். ஷூட்டிங்கிற்காகத்தான். அப்படிச் சுற்றும்போது ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிகத் தெளிவாக எடுத்துள்ளார் என்றார்

 ட்ரெய்லர் எப்படி?
ட்ரெய்லரை பொறுத்தவரை, ‘இந்த பொண்ணுங்கல்லாம் ஏன் இப்படி இருக்காங்க’ என பெண்களுக்கு எதிரான வசனங்களுடன் தொடங்குகிறது
வழக்கமான காதல் கதையாக இருக்கும் என யூகிக்கும்போது, ‘பெரிய இரும்பு கதவை திறக்க பலம் தேவையில்லை. சின்ன சாவி போதும்’ என படத்தின் கலர் மாறி

விறுவிறுப்பு கூட, ‘சாக்கடைல ஏறங்கி வேலைபார்க்குறவன் உழைக்காத உழைப்பா? முன்னேறிட்டானா அவன்’ என கவனம் ஈர்க்கும் வசனங்களுடன் காட்சிகள் கடக்கின்றன.

தொடர்ந்து, பணத்தை கொள்ளையடிப்பதும், காவல்துறை விசாரணை நடத்துவதும் என காட்சிகள் விரிவடைய
ஒரு பொண்ணு எவ்ளோ பெரிய ஆள் ஆனாலும், அவ ஒரு பொண்ணு. அவள் தாம்பத்யத்துக்கும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே என தொடக்கத்தில் வைக்கப்பட்ட வசனத்திற்கு முற்றிலும் எதிர்மாறாக ட்ரெய்லர் முடிகிறது.