கார்த்தி நடிக்கும் 26-வது படத்துக்கு ‘வா வாத்தியார்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றமும், டைட்டிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.கார்த்தி நடிப்பில் வெளியான அவரது 25-வது படமான ‘ஜப்பான்’ எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து அவர் நடிக்கும் 27-வது படத்தை பிரேம்குமார் இயக்குகிறார். ‘மெய்யழகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் (மே 24) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் 26-வது பட அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்குகிறார்.‘வா வாத்தியார்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல் தோற்றம் எப்படி?