கமல்ஹாசன் நாயகனாக நடித்து தயாரித்து சூன் 3 அன்று வெளியான படம் விக்ரம் வணிக ரீதியாக ஏற்கனவே தமிழ் படங்கள் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தையும் முறியடித்த இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, பகத்பாசில் நடித்த விக்ரம் படம் கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையில் அதிக திரையரங்கில் வெளியான படம், முதல் முறையாக தமிழகத்தில் 100 கோடி மொத்த வசூல் செய்த படம்,
இதுவரை தமிழ் சினிமா தமிழகத்தில் நிகழ்த்திய வசூல் சாதனையை முறியடித்த படம், உலக அளவில் 500 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த படம் என பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய விக்ரம் ஓடிடி தளத்தில்
விக்ரம் மூன்று சாதனைகளை படைத்துள்ளது படம் வெளியாகி ஒருமாதம் கழித்து சூலை 8 அன்று தான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. படத்தின் ஓடிடியின் வெளியீட்டுக்காக காத்திருந்த பலரும், ஓடிடியில் வெளியான இரவே படத்தை பார்த்துள்ளனர்
அந்த வகையில் திரையரங்குகளில் வசூல் சாதனை நிகழ்த்திய இப்படம், ஓடிடி வெளியீட்டிலும் புதிய சாதனை படைத்துள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வார இறுதியில் அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்ட படமாகவும் விக்ரம் படத்தை பார்ப்பதற்காக புதிய சந்தாதாரர்களை ஈர்த்த படமாகவும் விக்ரம் மாறியுள்ளது, அதேபோன்று இதுவரை டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் படங்களில்அதிக நேரம் பார்க்கப்பட்ட படம் என்கிற பெருமையும் விக்ரம் படம் பெற்றுள்ளது