விக்ரம் 150 கோடி சாத்தியமானது எப்படி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் 650 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்தப்படம் நகரகங்களில், மால்தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வசூலை குவித்து வருகிறதுதமிழக அரசு சார்பில் படம் வெளியான நாளிலிருந்து 3 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ‘விக்ரம்’ படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.48.68 கோடி வசூல் ஆனதாக தகவல் வெளியானது
இந்நிலையில், நேற்று இரவுக்காட்சி வரை 3 நாட்களில் தமிழ்நாட்டில் 66 கோடி ரூபாயும், கேரளாவில் 15.50 கோடியும், ஆந்திர, தெலங்கானா மாநிலத்தில் 10.50 கோடியும் கர்னாடகவில் 10 கோடியும் மொத்த வசூல் ஆகியுள்ளதாக வியாபார வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன கமலஹாசன் படத்திற்கான வசூலா என விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் கேட்டால் அப்படி கூற முடியாது விக்ரம் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் படம் வெளியான நாள் வரைபடம் பற்றிய புரமோஷன் செய்திகளை கமல்ஹாசன் தரப்பில் செய்யப்பட்டு வந்ததால் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது விஸ்வரூபம்-2 படத்திற்கு பின் கமல்ஹாசன் நடித்துள்ள படம், மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் என்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கமல்ஹாசனுக்கான ரசிகர்கள் கூட்டம் என்று ஏற்கனவே உள்ளது அத்துடன் சூர்யா, விஜய் சேதுபதி ரசிகர்கள் படம் பார்க்க குவிந்ததால் தமிழகத்தில் நகர்புறங்களில் இப்போதுவரை டிக்கெட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது கேரளாவில் இம்மூவருடன் மலையாளமுண்ணனி நடிகர் பகத்பாசில் நடித்திருப்பது வசூல் அதிகரிக்க காரணம் மொத்தத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, பகத் ஃபாசில் என நான்கு நட்சத்திரங்களுக்கான மொத்த வசூலாகவே இதனை பார்க்க வேண்டும் என்கின்றனர் சர்வதேச அளவில் சுமார் 160 கோடி வரை விக்ரம் மொத்த வசூல் செய்திருக்கிறது என்கின்றனர்