அறிமுக இயக்குநர்வெங்கி இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘வித்தைக்காரன்’. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இந்த படத்தில்சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விபிஆர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய சதீஷ்
“விஜய் சாருக்கு மிகப் பெரிய நன்றி. அவர் கையிலிருந்துதான் இயக்குநர் இப்படத்திற்கான செக் வாங்கினார். அவர் தீவிர விஜய் ரசிகர். விஜய் சார் கட்சி பெயர் அறிவிப்பதற்கு முதல் நாள் என்னை அழைத்திருந்தார். பார்த்தவுடனே அவர் சொன்ன முதல் வார்த்தை, ‘கான்ஜூரிங் கண்ணப்பன் சூப்பர் ஹிட்டுப்பா…’. இந்த வார்த்தை அவர் சொல்லி கேட்கும்போது, உண்மையிலே அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அவர் காஞ்ஜூரிங் கண்ணப்பன் பார்த்திருக்கார், அதை பற்றி என்னிடம் பேச வேண்டும் என நினைத்திருக்கிறார் என்பதே மிகப்பெரிய ஒரு வெற்றியாக இருந்தது. நான் சினிமா வந்ததற்கான பலன் அடைந்ததாக சந்தோஷப்பட்டேன். அவர் இப்போது அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஒரு ரசிகனாக அவர் அரசியலிலும் வெற்றி பெற வேண்டிக்கிறேன்”
இயக்குநர் வெங்கி தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். ‘V’ செண்டிமெண்ட் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகி வருகிறது. படம் ஆரம்பித்து வைத்த விஜய் சார், இயக்குநர் வெங்கி, பட டைட்டில் வித்தைக்காரன் என எல்லாம் ‘V’ தான். இப்படம் வெற்றியாக அமையுமென நம்புகிறேன். ஆனந்தராஜ் சார், இயக்குநர் சுப்பிரமணிய சிவா என எல்லோரும் நல்ல ரோல் செய்திருக்கிறார்கள். ஆனந்தராஜ் சாரை எல்லாம் சின்ன வயதில் பார்த்து பயந்திருக்கிறேன். இப்போது அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. சிம்ரன் குப்தா தமிழே தெரியாமல், டயலாக் மக்கப் பண்ணி அத்தனை அர்ப்பணிப்புடன் நடித்தார்,