இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அகிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். 2022ஏப்ரல் 6 அன்று வாரிசுபடம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் திரையரங்க வெளியீட்டிற்குப் பின்னான ஓடிடி ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றின் வியாபாரம் முடிக்கப்பட்டுள்ளதுவாரிசு படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனமும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சியும் பெற்றிருக்கிறதுதமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்கான ஓடிடி உரிமை மட்டும் நூறு கோடி ரூபாய்என்றும் இதே நான்கு மொழிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் 67 கோடி ரூபாய் என்றும் வியாபாரம் முடிந்துள்ளது விஜய் கதாநாயகனாக நடித்து இதுவரை வெளியான எந்தப்படமும் இதுபோன்று அதிகப்படியான விலைக்கு வியாபாரம் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது