இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில்
புரோட்டா சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. முதல் பாகத்துடன் முடிவடைய வேண்டிய படம் செலவு அதிகரித்ததால் அதனை சரிகட்ட இரண்டு பாகங்களாக வெளியிடுவது என தயாரிப்பு நிறுவனமும் – இயக்குநரும் முடிவடுத்தனர் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த விடுதலை – 2 ஒரு வழியாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதனையொட்டி சென்னையில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விழா நடைபெற்றது. திரைப்படம் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ளாத இளையராஜா இந்த விழாவில் கலந்து கொண்டது விடுதலை -2 படத்தின் மீதான கவனத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
விழாவில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன்,
“ஒரு படம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவை. எங்கள் படக்குழுவினர் அதற்கான உழைப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். சுமார் 257 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதில் விஜய் சேதுபதி கிட்டத்தட்ட 120 நாட்கள் நடித்திருப்பார்.
ஒரு படம் நல்ல படமாக மாறுவதற்கு அந்தப் படத்தின் படக்குழுதான் காரணம்.
ஒரு படம் நல்ல படமாக மாறுவதற்கு அந்தப் படத்தின் படக்குழுதான் காரணம்.
இப்படத்தில் ‘வாத்தியார்’ என்பது விஜய் சேதுபதியோ, நானோ இல்லை. விடுதலை என்பது தான் வாத்தியார். அது தான் மையக்கரு. படம் முடியும் போது நிறைய விஷயங்களை கத்துக்கொள்வோம்,