வெங்கட்பிரபு நடத்திய உந்தி மிமிக்கிரி நிகழ்ச்சி

வெங்கட் பிரபு முதன்முறையாக இயக்கும் தெலுங்கு திரைப்படம் ‘கஸ்டடி’ மூலம் தமிழுக்கு வருகிறார், தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் நாக சைதன்யா. வரும் 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் நாயகியாககீர்த்தி ஷெட்டி , அரவிந்த்சாமி, சரத்குமார் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இயக்குநர் வெங்கட்பிரபு பேசியபோது

படத்தின் டிரைலரை வைத்து எதுவுமே முடிவு செய்து விட வேண்டாம் என்றவர் அடுத்து பேசியது அரங்கத்தை மட்டுமல்ல தற்போது சமூக வலைதளங்களையும் அதிர வைத்துக்கொண்டுள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, 

‘பைட் வேணுமா பைட் இருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு…’ 

என்று பேசியது போல, வெங்கட் பிரபுவும்,

தில் ராஜூவின் பேச்சை தமிழும், தெலுங்கும் கலந்து இமிடேட் செய்யும் விதமாக நிகழ்ச்சியில் பேசினார் 

“எனக்கு தெலுங்கு சரளமாக பேச வராது” என்றவர், 

“இந்தப் படத்தில் ஸ்டைல் வேணுமா, ஸ்டைல் உந்தி. 

ஆக்சன் வேணுமா, ஆக்சன் உந்தி. ஃபர்பாமென்ஸ் வேணுமா, ஃபர்பாமென்ஸ் உந்தி. சென்டிமென்ட் வேணுமா, 

ஃபேமிலி சென்டிமென்ட் உந்தி. என்ன வேணுமோ, 

எல்லாம் உந்தி” என பேசவும் அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.அந்தநேரத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்து கொண்டிருந்த நாக சைதன்யா எதோ சொல்ல, மீண்டும் மைக்கை பிடித்த வெங்கட் பிரபு“மாஸ் வேணுமா, மாஸ் உந்தி” என்றார். 

உந்தி என்கிற தெலுங்குவார்த்தைக்கு இருக்கு என்று பொருள்