வெப்பன் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் ஆயுதம் என்று பொருள்.இந்தப்படத்தின் ஆயுதம் அதீத சக்தி கொண்ட சத்யராஜ்.அவருக்கு அதீத சக்தி வந்தது எப்படி? என்று விளக்க ஹிட்லர் கால ஜெர்மனிவரை சென்று வருகிறார்கள்.
இப்போது தேனி மாவட்டத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை இருவேறு குழுக்கள் தேடிவருகின்றன. அப்போது என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் திரைக்கதை.திரையில் வரும் நேரம் குறைவென்றாலும் அழுத்தமான வேடம் அமைந்திருக்கிறது சத்யராஜுக்கு. அதற்கேற்ற உடலமைப்பும் நடிப்பும் காட்சிக்கு வலிமை சேர்த்திருக்கிறது.சத்யராஜைத் தேடிச் செல்லும் யூடியூபராக நடித்திருக்கிறார் வசந்த்ரவி.அவருக்கும் நடிக்க ஒன்றுக்கு இரண்டு வாய்ப்புகள். சரியாகச் செய்திருக்கிறார்.
யாசிகா ஆனந்த், கனிகா,கஜராஜ், பரத்வாஜ்ரங்கன்,வேலுபிரபாகரன் உள்ளிட்டு நிறைய நடிகர்கள் படத்தில்இருக்கிறார்கள்.
பிரபுராகவ்வின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்குத் தக்க அமைந்திருக்கிறது. கிடைத்த இடைவெளிகளில் வெளிச்சத்தைப் பாய்ச்சி இலகுவாக்குகிறார்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை இயக்குநரின் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
கோபிகிருஷ்ணாவின் படத்தொகுப்பு பலவீனமாக இருக்கிறது.
திரைக்கதை தொய்வு பார்வையாளனுக்கு சலிப்பை ஏற்படுத்துவது பெரும் பலவீனம்.
ஏற்கெனவே வந்திருக்கிற பாதுகாப்பான கதைகளுக்குள் பயணிக்காமல் சினிமா