ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக2021 சூன் 24 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது அந்த செய்திகுறிப்பில் “அதிகாரம்” என்று பெயரிடப்பட்ட படத்தை வெற்றிமாறன் கதை ,திரைக்கதை வசனம் எழுதுவார் வெற்றிமாறன் உதவியாளர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் படத்தை இயக்குவார்இதன் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்ததுசினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய நல்ல திரைப்படங்களைக் கொடுத்துவரும் ராகவா லாரன்ஸ், ஃபைவ்ஸ்டார் எஸ்.கதிரேசன், வெற்றிமாறன்,ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் ஆகிய இந்த நால்வர் கூட்டணியால் இந்த பிரமாண்டமான படம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.என்றும் சொல்லப்பட்டிருந்தது.அதன்பின் அப்படம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை நயன்தாரா நடிக்கும் புதிய படமொன்றை இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்புஅறிவிப்பு வெளியானது.அப்படியானால் அதிகாரம் படத்தை துரை.செந்தில்குமார் இயக்குவார் என்று சூன் மாதம் அறிவித்தது என்னவானது என்று விசாரித்தால் வெற்றிமாறன் சொன்ன கதை ராகவாலாரன்சுக்குப் பிடிக்கவில்லையாம். ஓரிருமுறை கதையில் மாற்றம் செய்து அதையும் ராகவாலாரன்சிடம் போய்ச் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன்.எதுவும் அவருக்குத் திருப்தியாக அமையவில்லை என்பதால் அந்தப்படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் ராகவா லாரன்ஸ்.அதனால்தான், நயன்தாரா படத்தை இயக்கப்போய்விட்டாராம் துரை.செந்தில்குமார்.
Next Post