ஹன்சிகாவின் 50வது படத்தில் சிலம்பரசன் கேமியோ கேரக்டரில்

மதியழகன் மற்றும் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது  50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”. இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணாநகர் VR மாலில் நேற்று மாலை நடைபெற்றது விழாவில் பங்கேற்ற
இயக்குநர் சீனுராமசாமி பேசியதாவது..,
படத்தின் டிரைலர் ஹாலிவுட்க்கு இணையாக வந்திருக்கிறது, அதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் தான். பெண் குழந்தைகளுக்கான ஒரு முக்கியமான கருத்தை முன்னெடுத்து வைக்கும் படமாக இது இருக்கிறது. இப்படியான படத்தில் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளது சந்தோசமளிக்கிறது.
நடிகர் தம்பிராமையா பேசும்போது,
இந்தப்படத்தில் சிலம்பரசன் கௌரவத்  தோற்றத்தில் நடிக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால்அவர் நாற்பது நிமிடங்கள் இந்தப்படத்தில் வருகிறார். தம்பி சூர்யா மூன்று நிமிடங்கள் வந்த விக்ரம் படம் பெரிய வெற்றி எனும்போது சிலம்பரசன்நாற்பது நிமிடங்கள் வருகிறார் என்றால் இப்படம் மிகப்பெரிய வெற்றி என்பதற்கு எடுத்துக்காட்டு என்றார்
நடிகர் ஆரி பேசியதாவது.
இந்தப் படத்தில் ஹன்ஷிகா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார், அது பெருமையான விஷயம். நாயகியை  மையமாக வைத்து உருவாகும் படத்தில் பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. படத்தின் டிரைலரை பார்க்கும் போது, ஒரு கதையை ஆழமாக சொல்லியுள்ளார்கள் என தெரிகிறது. இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும்  ஹன்ஷிகா திறம்பட நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும்.  நல்ல படங்களுக்கு ரசிகர்கள்  ஆதரவு தர வேண்டும் என்றார்
RK செல்வமணி பேசியதாவது..,
சினிமாவின் மேல் பெரிய காதல் கொண்டவர்  மதியழகன், அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். இந்த படத்தின் டிரைலர் எனக்கு புலன் விசாரணை படத்தை ஞாபகப்படுத்தியது. படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் சிறப்பான பணியை செய்துள்ளனர். ஹன்ஷிகா இந்த படத்திற்காக முழு அர்பணிப்பை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் பணி இந்த படத்தில் அட்டகாசமாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் என்றார்
நடிகை ஹன்சிகா பேசியதாவது..,
மஹா படம் எனக்கு வந்த போது, இது எனது 50 ஆவது படம் என்று நான் நினைக்கவில்லை. என் 50 ஆவது படமாக மஹா  திரைப்படம் அமைந்ததில் நான் மிகவும்  மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்து, படத்தை மெருகேற்றியுள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது. நண்பர் சிம்பு படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவருக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். படத்திற்கு உங்களுக்கு ஆதரவு தேவை என்றார்.