ஹரிஷ் கல்யாண் படத்தில் இணைந்த விஜய் 63 பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இளம் இயக்கத்தில் வந்த பியார் பிரேமா காதல் படம் வெற்றி படமாக அமைந்தது. ரசிகர்கள், ரசிகைகளின் ஆதரவும் அவருக்கு அதிகானது.

அதனையடுத்து அவர் நடித்த இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படம் வெளியானது. தற்போது தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கில் இணைந்தார்.

2012 ல் ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான குரானா நடிப்பில் வெளியான இப்படத்திற்கு தமிழில் தாராள பிரபு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தில் விஜய் 63 ல் நடித்து வரும் காமெடி நடிகர் விவேக்கும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.