ஹரீஷ் கல்யாண்-இந்துஜா நடித்த ‘பார்க்கிங்’ டிசம்பர் 1-ம் தேதி வெளியாகிறது!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘பார்க்கிங்’படத்தை
பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.
‘பார்க்கிங்’ படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ்(எடிட்டிங்), என்.கே.ராகுல்(கலை), டி.முருகேசன்(நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு(ஆக்‌ஷன்), ஷேர் அலி(ஆடைகள்), அப்சர்(நடன இயக்குநர்), யுகபாரதி(பாடல் வரிகள்), டி.டி.எம்.(விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலிக்கலவை), சிங்க் சினிமா(ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ்(வடிவமைப்பு), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் உள்ளனர்.‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான – பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை, இத்திரைப்படம் வரும் டிசம்பர் 1 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.