கன்னடத்தில் தயாராகும் 3D படத்திற்கு 100 கோடி பட்ஜெட்

கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு பல்வேறு இந்திய மொழிகளில் ” கேஜிஎப் “படத்தின் வெற்றி கன்னட சினிமாவின் வியாபார எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறது

சில கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு கர்நாடக மாநிலத்திற்குள்ளேயே வெற்றிதோல்விகளை தீர்மானித்துவந்த கன்னட “கேஜி எப்” படத்தின் உலகளாவிய வசூல் இந்திய, சர்வதேச திரைப்பட சந்தையில் போட்டிபோடலாம் என்கிற தன்னம்பிக்கையை உருவாக்கியுள்ளது அதனால் பிரம்மாண்ட செலவு செய்து கன்னட படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளனர்
ஈபடத்தின் மூலம் தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் நெருக்கமானவர் கிச்சா சுதீப்கன்னடத்தில் தயாராகி வரும் படம்
விக்ராந்த் ரோணா.

இந்தப் படத்தில்கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீட்டா அசோக், ஜாக்குலின் பெர்ணாண்டஸ், உள்பட பலர் நடிக்கிறார்கள். அனூப் பண்டாரி இயக்குகிறார், ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரிக்கிறார்கள்.

சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் பேண்டஸி த்ரில்லர் வகை படமாகும். பல வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் உருவாகும் 3டி தொழில்நுட்ப படம். கன்னடம் தவிர்த்து 14 மொழிகளில் வெளியாகிறது. படத்தின் 3டி பணிகளுக்கென்றே பல கோடி செலவு செய்கிறார்கள்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி கூறியதாவது: விக்ராந்த் ரோணா ஒரு மர்மம் நிறைந்த கதாபாத்திரம். இந்த திரைப்படத்தை உருவாக்கும் போது, இது மிகப்பெரியபாத்திரம் என்பதை புரிந்து கொண்டேன். சுதீப் சார் இதில் கதாநாயகனாக வந்த பிறகு, அப்பாத்திரத்தின் பலம் இன்னும் அதிகமாகிவிட்டது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். என்றார்.